என் மலர்tooltip icon

    கடலூர்

    சாலையை சீரமைக்க கோரி மறியல் போராட்டம் நடைபெறும் என்று வர்த்தக சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் இந்திரா நகர் பகுதியில் சாலை மறியல் செய்தனர்.

    பண்ருட்டி:

    விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சை வரை 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை பணி தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்த பணியால் பல்வேறு இடங்களில் சாலைகள் உருக்குலைந்து காணப்படுகிறது.

    இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும், கிடப்பில் போடப்பட்டு உள்ள சாலையை பணியினை உடனே தொடங்க வேண்டும் என்று வர்த்தக சங்கத்தினர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க படவில்லை.

    எனவே சாலையை சீரமைக்க கோரி மறியல் போராட்டம் நடைபெறும் என்று வர்த்தக சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் இந்திரா நகர் பகுதியில் சாலை மறியல் செய்தனர். மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். இந்த மறியல் போராட்டத்தில் இந்திராநகர் பகுதி வணிகர் சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள், வணிகர்கள் கலந்து கொண்டனர்.

    மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். சாலையை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன்பின்னர் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் ராஜலட்சுமி (வயது 21). இவர் கொள்ளுகரங்குட்டை வள்ளலார் கல்லூரியில் பி.எட்., படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று ராஜலட்சுமி கல்லூரிக்கு சான்றிதழ் வாங்க செல்வதாக கூறி சென்றவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் ராஜலட்சுமியை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்வில்லை.

    இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி ராஜலட்சுமி என்ன ஆனார்? எங்கு சென்றார்? அவரை யாரேனும் கடத்தி சென்றனரா? என்பன குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் அபிநயா (17). இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு பாத்திரகடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் வேலை முடித்து வீட்டிற்கு கிளம்பிய அபிநயா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து அவரது பெற்றோர் அபிநயாவை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்க வில்லை.

    இந்த சம்பவம் குறித்து ராமலிங்கம் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன அபிநயாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பண்ருட்டி அருகே உள்ள கீழ்காங்கேயன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜதுரை (29). இவர் சம்பவத்தன்று ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ராஜேந்திரன் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் நேரம் முடிந்து விட்டது என போலீசார் திட்ட வட்டமாக கூறினர். ஆனால் அவர்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே கட்டமாக ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் 14 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடை பெற்று முடிந்தது.

    அதனைத் தொடர்ந்து கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளிலும் நேற்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இரவு வாக்கு பெட்டி எந்திரம் பாதுகாப்பாக கடலூர் புனித வளனார் வைக்கப்பட்டு 24 நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று கடலூர் கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றுமுடிந்தது. அதன்பின்னர் மாலை 5 மணிக்கு மேல் கொரோனா பாதித்த நபர்களுக்கு மட்டும் வாக்களிக்க அனுமதி அளித்த நிலையில், 30-க்கும் மேற் பட்ட நபர்கள் வாக்களிக்க வேண்டுமென திரண்டனர்.

    அப்போது தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் நேரம் முடிந்து விட்டது என போலீசார் திட்ட வட்டமாக கூறினர். ஆனால் அவர்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

    இதுகுறித்து கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலத்தில் கள்ள ஓட்டு போட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள வடக்கு கோட்டை வீதி அரசு உதவி பெறும் பள்ளியில் 24-வது வார்டு வாக்காளர்களுக்கு வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த வாக்கு சாவடி மையத்தில் நேற்று மாலை 4 மணிக்கு கணேசன் என்ற பெயரில் வாலிபர் ஒருவர் வாக்கு பதிவு செய்ய பூத் சிலிப்புடன் வந்தார். இந்த வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர் விருத்தாசலம் 14-வது வார்டு பழமலைநாதர் நகரை சேர்ந்த ஜீவா (வயது 23) என்பதும், இவர் ஏற்கனவே இறந்த விருததம்பிகை நகரை சேர்ந்த கணேசனின் பெயரில் வாக்கு பதிவு செய்ய வந்திருப்பதும் தெரியவந்தது. உடனே இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜீவா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவத்தால் அந்த வாக்கு சாவடி மையத்தில் 30 நிமிடங்கள் வாக்கு பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர் அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் அருகே மருதாடு சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 33). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை தோட்டப்பட்டு பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக இறங்கியுள்ளார். பின்னர் வெகுநேரமாகியும் மேலே வராததால் அங்கு உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஏரியில் இறங்கி தேடி பார்த்தனர்.

    அப்போது அய்யப்பன் சேற்றில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனே அங்கு உள்ளவர்கள் அய்யப்பனை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அய்யப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் அப்போது அய்யப்பன் சேற்றில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அய்யப்பன் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம் அருகே தனியார் பஸ் மற்றும் கார் மோதிக்கொண்ட விபத்தில் மருத்துவ பணியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    சிதம்பரம்:

    சென்னை பரணிபுத்தூர் ஈஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது 31). இவரது அண்ணன் இளையராஜா. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர்கள் சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த பூபதி (33), செனாய் நகரை சேர்ந்த நவீன்(36) , வியாசர்பாடியை சேர்ந்த நாகராஜன் (47), பரங்கிப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (30) ஆகியோருடன் சென்னையிலிருந்து சீர்காழி நோக்கி காரில் சென்றனர்.

    புதுசத்திரம் பஸ் நிலையம் அருகே சென்ற போது எதிரே தனியார் பஸ் வந்தது. இந்த பஸ் எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். காரை ஓட்டி வந்த ராஜி உட்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூரில் வயது மூப்பு காரணமாகவும், வறுமையின் காரணமாகவும் மனமுடைந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    கடலூர் அருகே நடுவர் பேட்டை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வள்ளி. (வயது 75). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மூதாட்டி வள்ளி தனது கணவர் பெருமாளுடன் வசித்துவந்தார். தற்போது வயது மூப்பு காரணமாகவும், வறுமையின் காரணமாகவும் மூதாட்டி வள்ளி மனமுடைந்த நிலையில் நேற்று வி‌ஷம்குடித்தார்.

    இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக அவர்களது உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட புவனகிரி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளுக்கு 21 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    புவனகிரி:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட புவனகிரி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளுக்கு 21 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து புவனகிரி பேரூராட்சியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து செல்வதை காண முடிந்தது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பேரூராட்சி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    வடலூர், குறிஞ்சிப்பாடியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
    மந்தாரகுப்பம்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளுக்கு 45 வாக்குச்சாவடி மையங்களிலும், குறிஞ்சிப்பாடி நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளுக்கு 28 வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 7.30 மணி முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவை முன்னிட்டு வேட்பாளர்கள், முகவர்கள் அதிகாலை 5.30 மணிக்கே வாக்குப்பதிவு மையத்துக்கு வந்தனர். அவர்கள் முன்பாக சின்னங்கள் பொருத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் அகற்றப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

    கடலூர் அருகே செம்மண்டலம் காந்திநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அய்யப்பன் எம்.எல்.ஏ. தனது குடும்பத்துடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.
    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் தேர்தலை இன்று சந்திக்கிறது. மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இந்த 45 வார்டுகளில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் உள்பட 264 பேர் களத்தில் உள்ளனர்.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் 152 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கடலூர் மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 474 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    கடலூர் அருகே செம்மண்டலம் காந்திநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அய்யப்பன் எம்.எல்.ஏ. தனது குடும்பத்துடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    விருத்தாசலம் நகராட்சி பகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு அமைதியாக நடந்துவரும் சூழலில் 4 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் அங்கு மட்டும் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி பகுதியிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    விருத்தாசலம் நகராட்சியில் மொத்தமுள்ள 38 வார்டுகளில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் உள்பட 143 பேர் போட்டியில் உள்ளனர். இன்று வாக்குப் பதிவுக்கென 68 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    விருத்தாசலம் நகராட்சியில் மொத்தம் 60 ஆயிரத்து 202 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 29 ஆயிரத்து 537 பேர், பெண் வாக்காளர்கள் 30 ஆயிரத்து 720 பேர், திருநங்கைகள் 15 பேர். விருத்தாசலம் நகராட்சி பகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு அமைதியாக நடந்துவரும் சூழலில் 4 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் அங்கு மட்டும் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

    பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
    திட்டக்குடி:

    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் இன்று காலை தொடங்கியது. திட்டக்குடி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகளில் 124 பேர் களத்தில் உள்ளனர்.

    இதனையடுத்து வாக்காளர்கள் வாக்களிக்க 24 வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. மேலும் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து வருகின்றனர். முககவசம் அணியாதவர்களுக்கு முககவசம் வழங்கப்படுகிறது.

    இதேபோல் பெண்ணாடம் பேரூராட்சியில் மொத்தம் 14 வார்டுகளில் 70 பேர் போட்டியிடுகின்றர். வாக்காளர்கள் வாக்களிக்க 8 வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. அனைத்து பகுதிகளிளும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
    ×