என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி-கும்பகோணம் நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி திடீர் மறியல்
பண்ருட்டி:
விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சை வரை 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை பணி தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்த பணியால் பல்வேறு இடங்களில் சாலைகள் உருக்குலைந்து காணப்படுகிறது.
இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும், கிடப்பில் போடப்பட்டு உள்ள சாலையை பணியினை உடனே தொடங்க வேண்டும் என்று வர்த்தக சங்கத்தினர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க படவில்லை.
எனவே சாலையை சீரமைக்க கோரி மறியல் போராட்டம் நடைபெறும் என்று வர்த்தக சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் இந்திரா நகர் பகுதியில் சாலை மறியல் செய்தனர். மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். இந்த மறியல் போராட்டத்தில் இந்திராநகர் பகுதி வணிகர் சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள், வணிகர்கள் கலந்து கொண்டனர்.
மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். சாலையை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன்பின்னர் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது






