என் மலர்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள புனித தோமையர் மலை, காட்டாங்கொளத்தூர் மற்றும் திருப்போரூர் பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அங்கு நோய் தடுப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.
துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.
மேலும் புனித தோமையர்மலை வட்டாரம், மேடவாக்கம் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் நோய்தொற்று குறித்து சர்வே பணிகளையும் காய்ச்சல் முகாம் மற்றும் தடுப்பூசி முகாம் போன்றவற்றை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் மனோகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், செயற்பொறியாளர் கவிதா, உதவி செயற்பொறியாளர் விக்டர் அமிர்தராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆனந்தன், உதவி திட்ட அலுவலர் சுப்புலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
சுகாதாரத்துறை சார்பில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
வண்டலூர்:
வண்டலூர் அருகே சிகிச்சைக்கு பயந்து 6 கொரோனா நோயாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் 1700 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி நடைபெறுகிறது. இங்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி கட்டிட வேலைகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுகாதாரத்துறை சார்பில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களில் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 33 தொழிலாளிகளையும் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கீரப்பாக்கத்திற்கு ஆம்புலன்சுடன் சென்றனர்.
33 கொரோனா தொற்று பாதித்த நபர்களில் 6 பேர் கிகிச்சைக்கு வரமறுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மற்றவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதி்த்தனர். தப்பியோடிய 6 கொரோனா நோயாளிகளை உடனடியாக பிடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வண்டலூர் தாசில்தார் ஆறுமுகத்திற்கு உத்தரவிட்டார். இதனையடுத்து வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் தப்பி ஓடிய வடமாநிலத்தை சேர்ந்த 6 கொரோனா நோயாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,954 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 657-ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,954 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 38 பேர் பரிதாபமாக இறந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,954 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 657-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 62 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்தனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,474-ஆக உயர்ந்தது. 15,121 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 1,017 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 574-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 48 ஆயிரத்து 671 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 15 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 802- ஆக உயர்ந்துள்ளது. 7,101 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ஜான் லூயிஸ் உத்தரவிட்டார்.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் பாட்டைத்தெரு, தென் மாடவீதி, பாடசாலை தெரு போன்ற பகுதிகளில் மொத்தம் 19 பேர் சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பினர். இந்த நிலையில்.திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலர் திருஞானசம்பந்தம் மேற்பார்வையில் மேற்கூறிய 3 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வெளியாட்கள் மற்றும் வாகனங்கள் வராதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டது. தவிர பேரூராட்சியின் அனைத்துப்பகுதிகளிலும் 2 வாகனங்கள் மூலம் கொரோனா தொற்றை தடுக்க கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.
இந்த பணிகளை பார்வையிட செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நேற்று காலை திருக்கழுக்குன்றம் வருகை தந்தார். அவருடன் வருவாய் ஆர்.டி. ஓ. சுரேஷ், தாசில்தார் துரைராஜன் மற்றும் அதிகாரிகள் வந்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த கலெக்டர் ஜான் லூயிஸ் பேரூராட்சி நிர்வாக அலுவலர் வீடுகள் தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை் பற்றிய கணக்கெடுப்பு நடத்தவும் சுகாதார பணிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.
தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளியிடம் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே உள்ள புழுதிவாக்கம், நியூ இந்தியன் காலனி, பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜோசப் ஞானதாஸ்(வயது 78). கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 18-ந்தேதி பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தனது மருத்துவ செலவுக்காக ரூ.40 ஆயிரம் இருந்த கைப்பையை படுக்கைக்கு கீழே வைத்து இருந்தார்.
பின்னர் சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரிக்கு கட்டணம் செலுத்த பணத்தை தேடியபோது, ரூ.40 ஆயிரம் இருந்த பணப்பை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் விசாரித்தபோது, துப்புரவு பணியாளரான திருவண்ணாமலையைச் சேர்ந்த சூர்யா(21) கடந்த 18-ந்தேதிதான் பணிக்கு சேர்ந்ததும், தற்போது அவர் மாயமாகி இருப்பதும் தெரிந்தது.
எனவே அவர் மீது சந்தேகமடைந்த ஜோசப் ஞானதாஸ், இதுபற்றி பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காலை 6 மணி முதல் 10 மணிவரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அரசு அனுமதித்துள்ளது.
கல்பாக்கம்:
கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணிவரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அரசு அனுமதித்துள்ளது. இந்த நிலையில் திருக்கழுக்குன்றத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சில கடைகள் செயல்பட்டன. தகவலறிந்த வருவாய்துறையினர் அந்த கடைகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் 4 கடைகள் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 மளிகை கடைகள், பழக்கடை மற்றும் இரும்பு கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,299 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 37 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,299 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 898-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 1,427 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300-ஆக உயர்ந்தது. இவர்களில் 15,171 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 761 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 653 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 45 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்தனர்.
இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 743- ஆக உயர்ந்துள்ளது. 6,605 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 595 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 37). இவர் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் ஊழியராக பணிபுரிந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இவருடன் சேர்த்து நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 595 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 99 ஆயிரத்து 426 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,263 ஆக உயர்ந்தது. இதில் 14 ஆயிரத்து 906 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 1,241 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 848 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 45 ஆயிரத்து 5 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
நேற்று சிகிச்சைப் பலனின்றி 12 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 724 உயர்ந்துள்ளது. 6 ஆயிரத்து 119 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே கார் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மோச்சேரியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 76). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று மாலை சைக்கிளில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மோச்சேரி என்ற இடத்தில் சைக்கிளை தள்ளி கொண்டு சென்றார்.
அப்போது அவர் மீது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் தள்ளிச் சென்ற சைக்கிள் அங்கே நடந்து சென்ற மோச்சேரி அடுத்த அருணாகுளத்தை சேர்ந்த வாட்ச் கடை நடத்தி வந்த வேலு (37) என்பவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த வேலுவை சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சிற்பிகள், வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் படிப்படியாக கொரோனா தொற்று பரவி வருகிறது. இதையொட்டி பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமையில் நடந்தது. முன்னதாக கோவிஷீல்டு தடுப்பூசி போடுவது குறித்து ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் தெருக்கள் தோறும் அறிவிப்பு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த முகாமில் மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சிற்பிகள், வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். அதேபோல் கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் முகாமில் கொரோனா தொற்று ஏற்பட்டால் வீட்டில் தனிமை படுத்தி கொண்டவர்கள் என்ன மாதிரியான சிகிச்சை முறைகளை மேற்கொள்வது, என்ன மாதியான உணவுகளை உட்கொள்வது என்பது குறித்தும் டாக்டர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,013 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 295 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,013 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,013 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 295 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 96 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,198 ஆக உயர்ந்தது. 13,711 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 1,521 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 459 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 42 ஆயிரத்து 966 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்தனர்.
இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது. 5,789 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையாளர்கள் கண்டுகளிக்க 31-ந்தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
மாமல்லபுரம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் தொல்பொருள் கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை மூட அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் இன்று (சனிக்கிழமை) வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது எழுந்துள்ள இக்கட்டான சூழல் காரணமாக மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள், அருங்காட்சியங்கள் வருகிற 31-ந்தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.