search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    மாமல்லபுரத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி

    மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சிற்பிகள், வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் படிப்படியாக கொரோனா தொற்று பரவி வருகிறது. இதையொட்டி பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமையில் நடந்தது. முன்னதாக கோவிஷீல்டு தடுப்பூசி போடுவது குறித்து ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் தெருக்கள் தோறும் அறிவிப்பு செய்யப்பட்டது.

    இதையடுத்து இந்த முகாமில் மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சிற்பிகள், வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். அதேபோல் கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் முகாமில் கொரோனா தொற்று ஏற்பட்டால் வீட்டில் தனிமை படுத்தி கொண்டவர்கள் என்ன மாதிரியான சிகிச்சை முறைகளை மேற்கொள்வது, என்ன மாதியான உணவுகளை உட்கொள்வது என்பது குறித்தும் டாக்டர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
    Next Story
    ×