என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ஏரியில் பிணமாக கிடந்த தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மலங்கன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி(வயது 50). கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மலங்கன்குடியிருப்பு கிராமத்தில் உள்ள ஆலடி ஏரியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் பிராஞ்சேரி கிராம நிர்வாக அதிகாரி கவிதாவிற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் கவிதா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், இறந்தவர் மலங்கன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி(வயது 50). கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த அவரது மகள் வினிதா தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மலங்கன்குடியிருப்பு பகுதி மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் சக்கரவர்த்தியின் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்
    • சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளாா்

    அரியலூர்:

    போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் ெஜயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்துக்காக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. மக்களின் நன்மை குறித்து அக்கறையற்று இருந்தது. அதனால் மக்கள் இழப்பீடும் கிடைக்காமல், நிலத்திற்கும் உரிமையில்லாமல் தவிக்கும் நிலை நீடித்தது.

    2021 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் அரியலூா் வந்திருந்த ஸ்டாலின், ெஜயங்கொண்டம் நிலக்கரித் திட்டம் செய ல்படுத்தவில்லையென்றால் உரியவா்களிடம் நிலத்தை மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

    அதன்படி தி.மு.க. ஆட்சி அமைந்து ஓராண்டில், நிலத்தை உரியவா்களிடம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளாா் தமிழக முதல்வா் ஸ்டாலின். எந்தக் கட்சியும் போராட்டம் நடத்தாமல், கோரிக்கை வைக்காமல் தான் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளாா் அவா்.

    நிலத்தை திரும்பக் கொடுத்ததோடு மாத்திரமல்லாமல், அதற்காக அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையைத் திரும்ப வழங்க வேண்டாம் என்றும் அறிவித்துள்ளாா். இது வரலாற்று சாதனையாகும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    • கையக படுத்திய நிலங்களை திரும்ப வழங்க உத்தரவுவை தொடர்ந்து பா.ம.க.வினர் வெடிவெடித்து கொண்டாடினர்.
    • தொடர்ந்து பல கட்டங்களாக போராடி வந்தது.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதி புதுக்குடி தண்டலை கல்லாத்தூர் உள்ளிட்ட13 கிராமங்களில் நிலக்கரி இருப்பதாக கூறி நிலங்களை தமிழக அரசு 1996 ம் ஆண்டு1,210 பேரிடம் 8,370 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியது.

    அவர்களுக்கு இதுநாள்வரை போதி–யஇழப்பீ–டும்வழங்க––ப்படவில்லை. நிலங்களும் திருப்பி அளிக்கப் பட–வில்லை. இதற்காக பாட்டா–ளி மக்கள் கட்சி தொடர்ந்து பல கட்டங்களாக போராடி வந்தது.

    இந்நிலையில் தமிழக அரசு நிலங்களை திருப்பி பொதுமக்களிடமே வழங்கலாம் எனஉத்தரவி–ட்டதை அடுத்து ஜெயங்கொ–ண்டம் நால்ரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தங்கராசு ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் ராஜேஷ். பரசுராமன் தா பழூர் ஒன்றிய செயலாளர் கொளஞ்சி நாதன்ஜெயங் கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • ஜல்லிக்கட்டில் மாடு முட்டி சிகிச்சை பெற்றவர் உயிரிழந்தார்.
    • சீறிப்பாய்ந்து வந்த காளை எதிர்பாராதவிதமாக இளவரசனை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த இளவரசனுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கனூர் கிராமத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

    ஜல்லிக்கட்டை அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளை அதன் உரிமையாளர்கள் சேகரிக்கும் இடத்திற்கு அருகே பார்வையாளராக குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த இளவரசன்(35) பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளை எதிர்பாராதவிதமாக இளவரசனை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த இளவரசனுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இளவரசன் உயிரிழந்தார். இதுகுறித்து இளவரசனின் மனைவி முத்துலட்சுமி வெங்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்பதற்காக அதிகாரிகளுடன் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி இன்று அரசு பஸ்சில் பயணம் செய்தார்.
    • அரசு அதிகாரிகள் அனைத்து வாகனங்களையும் தவிர்த்து விட்டு அரசு பேருந்தில் பயணம் செய்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க முடியும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் கலந்துகொள்வதற்காக மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி இன்று அனைத்து துறை அதிகாரிகளுடன் அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்தார்.

    அவர் தனது அலுவலகத்தில் இருந்து 31 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடம்பூர் கிராமத்திற்க்கு 45 நிமிடங்கள் செய்தார்.

    இதுகுறித்து கலெக்டர் ரமண சரஸ்வதி கூறுகையில், அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது அனைத்து அதிகாரிகளும் ஒரே நேரத்தில் பயணம் செய்து ஒரு நேரத்தில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய முடியும்.

    அரசு அதிகாரிகள் அனைத்து வாகனங்களையும் தவிர்த்து விட்டு அரசு பேருந்தில் பயணம் செய்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், இது போல் பயணம் செய்வதாகவும் இது போல் இனி தொடர்ந்து மக்கள் தொடர்பு முகாமிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    திடீர் ஏற்பாட்டால் டிக்கட் எடுத்து பயணம் செய்வதாகவும் அடுத்த முறை துறை ரீதியாக பேசி பயணம் செய்ய திட்டமிடப்படும் என்று அவர் கூறினார்.


    • சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.
    • மகா அபிஷேகம், மங்கள தீபாராதனை நடைபெற உள்ளன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுகந்த குந்தளாம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது.

    இதையடுத்து கிராம முக்கியஸ்தர்கள், நாட்டாமைக்காரர்கள் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, திருப்பணிகளை மேற்கொண்டனர். திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளை(வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி கடந்த 5-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. பின்னர் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. நேற்று முன்தினம் தீர்த்தசங்கிரகணமும், நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் வாஸ்துசாந்தி செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

    இன்று(புதன்கிழமை) காலை 7 மணி அளவில் கணபதி பூஜையுடன் இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற உள்ளன. மாலை 5 மணி அளவில் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. நாளை காலை 5 மணி அளவில் லட்சுமி, கணபதி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளன.

    இதைத்தொடர்ந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு காலை 8.45 மணிக்கு ராஜகோபுரம், விமானங்கள் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 9 மணிக்கு மூலஸ்தான மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், மங்கள தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளன. இதனால் அந்த கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது.


    • ஆண்டிமடம் அருகே நடந்த சாலை விபத்தில் பெண் பலியானார். கணவர் படுகாயம் அடைந்தார்.
    • அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் ரெஜினா மேரி மீது ஏறி இறங்கியது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே பொன்னாங்கண்ணி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கபிரகாசம் வயது 67, இவரது மனைவி ரெஜினாமேரி (60).

    இவர்கள் மோட்டார்சைக்கிளில் அருகிலுள்ள பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு சொந்த வேலையாக சென்று திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    பெரியகிருஷ்ணா புறத்திலிருந்து பொன்னாங்கன்னி நத்தம் செல்லும் வழியில் ரெட்டி தத்தூர் கிராமத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென சாலையில் தடுமாறி விழுந்தனர்..

    அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் ரெஜினா மேரி மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ரெஜினா மேரி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    காயமடைந்த தங்க பிரகாசம் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இச்சம்பவம் தொடர்பாக ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமானூரில் சி.பி.எம். கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் கோவில் எசனை ஊராட்சிக்கு உட்பட்ட விளாகம் கிராமத்தில் மக்கள்நடமாடும் கிராம சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கோவில் எசனை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் புனிதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழுஉறுப்பினர் கிருஷ்ணன் கண்டன உரை நிகழ்த்தினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோவில் எசனை ஊராட்சிக்கு உட்பட்ட விளாகம் கிராமத்தில் மக்கள்நடமாடும் கிராம சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,

    வீதியில் ஓடும்சாக்கடையை தடுத்து நிறுத்தி வீதிகளில் இருபுறமும் வடிகால் வசதி செய்து கொடுக்கவும்,

    கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் குடிநீர் வசதி கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    • அரியலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ்கண்ட 38 ஊராட்சிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாம்களில் பட்டா மாறுதல், வண்டல் மண் எடுத்தல், பயிர் கடன் மற்றும் உழவர் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் வட்டாரத்தில் வாலாஜா நகரம், ரெட்டிப்பாளையம், கடுகூர், ஆலந்துறையார்கட்டளை, எருத்துகாரன்பட்டி, காவனூர், நாகமங்கலம், புங்கங்குழி. செந்துறை வட்டாரத்தில், மணப்பத்தூர், தளவாய், ஆலத்தியூர், அசவீரன்குடிகாடு,

    மணக்குடையான். திருமானூர் வட்டாரத்தில் அழகியமணவாளன், ஏலாக்குறிச்சி, கீழகாவட்டாங்குறிச்சி, சின்னப்பட்டாக்காடு, கண்டிராதீர்த்தம், பூண்டி.ஜயங்கொண்டம் வட்டாரத்தில் தழுதாலைமேடு, குந்தவெளி,

    முத்துசேர்வாமடம், கங்கை கொண்ட சோழபுரம்,காட்டகரம், தத்தனூர், இறவாங்குடி. ஆண்டிமடம் வட்டாரத்தில் கூவத்தூர், அழகாபுரம், ஆண்டிமடம், பெரியகிருஷ்ணாபுரம், விளந்தை,

    இலையூர், சில–ம்பூர். தா.பழூர் வட்டாரத்தில், அம்பாப்பூர், சிந்தாமணி, தா.பழூர், வேம்புகுடி, பருக்கல் ஆகிய 38 ஊராட்சிகளில் சிறப்பு வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நடை பெற்றது.

    இந்த முகாம்களில் பட்டா மாறுதல், வண்டல் மண் எடுத்தல், பயிர் கடன் மற்றும் உழவர் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டது.

    பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு, கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. முகாமுக்கு அந்தந்த வட்டார வேளாண் அலுவலர்கள் தலைமை வகித்தனர்.

    • ஆசிரியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்து கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய வேண்டும் நிறுத்தப்பட்ட ஈட்டி விடுப்பு வழங்க வேண்டும் ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் வழங்கப்படாத டி ஏ உடனடியாக வழங்க வேண்டும்

    உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். மற்றும் விடைத்தாள் மையத்தை அமைத்து தந்த அரசுக்கு நன்றி தெரிவித்தனர். கூட்டத்தில். மாநில தலைவர் நல்லாசிரியர் பொன் செல்வராஜ் சிறப்புரை ஆற்றினார்.

    தலைவர் தா பெரியசாமி தலைமை தாங்கினார் முன்னதாக இங்கர்சால் மாவட்ட செயலாளர் வரவேற்புரை பேசினார். கா செல்வராஜ் முன்னிலை வகித்தார் மேலும் இந்த கூட்டத்தில் உடையார்பாளையம் செந்துறை ஆண்டிமடம் வரதராஜன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • திருமாவளவன் 60 வது பிறந்த நாளை மணி விழாவாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் செந்துறை வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஒன்றிய செயற்குழு கூட்டம் தளவாய் கிராமத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வீரவளவன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் கவிஞர் இளமாறன், அரியலூர் மாவட்ட செயலாளர் செல்வநம்பி, மாநில பொறுப்பாளர்கள் அன்பானந்தம், கருப்புசாமி,

    மாவட்ட அமைப்பாளர்கள் ஜெயக்குமார், சிறுகளத்தூர் கந்தன், பாலசிங்கம் அரியலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் மருதவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடு மற்றும் பொதுமக்கள் நலன் குறித்து பேசினர்.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் 60 வது பிறந்த நாளான ஆகஸ்டு 17 அன்று அவர் பிறந்த மாவட்டமான அரியலூர் மாவட்டத்தில் மணி விழா மாநாடாக நடத்த வேண்டும்.

    செந்துறை பகுதிகளில் உள்ள சிமெண்ட் ஆலைகள் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலை வழங்க வேண்டும். ஆலையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    ×