என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ஏரியில் பிணமாக கிடந்த தொழிலாளி
- ஏரியில் பிணமாக கிடந்த தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மலங்கன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி(வயது 50). கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மலங்கன்குடியிருப்பு கிராமத்தில் உள்ள ஆலடி ஏரியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் பிராஞ்சேரி கிராம நிர்வாக அதிகாரி கவிதாவிற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் கவிதா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்தவர் மலங்கன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி(வயது 50). கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த அவரது மகள் வினிதா தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த மலங்கன்குடியிருப்பு பகுதி மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் சக்கரவர்த்தியின் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.