என் மலர்
நீங்கள் தேடியது "WOMAN KILLED IN ROAD ACCIDENT"
- ஆண்டிமடம் அருகே நடந்த சாலை விபத்தில் பெண் பலியானார். கணவர் படுகாயம் அடைந்தார்.
- அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் ரெஜினா மேரி மீது ஏறி இறங்கியது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே பொன்னாங்கண்ணி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கபிரகாசம் வயது 67, இவரது மனைவி ரெஜினாமேரி (60).
இவர்கள் மோட்டார்சைக்கிளில் அருகிலுள்ள பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு சொந்த வேலையாக சென்று திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
பெரியகிருஷ்ணா புறத்திலிருந்து பொன்னாங்கன்னி நத்தம் செல்லும் வழியில் ரெட்டி தத்தூர் கிராமத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென சாலையில் தடுமாறி விழுந்தனர்..
அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் ரெஜினா மேரி மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ரெஜினா மேரி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த தங்க பிரகாசம் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






