என் மலர்
நீங்கள் தேடியது "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்"
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்
- சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளாா்
அரியலூர்:
போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் ெஜயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்துக்காக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. மக்களின் நன்மை குறித்து அக்கறையற்று இருந்தது. அதனால் மக்கள் இழப்பீடும் கிடைக்காமல், நிலத்திற்கும் உரிமையில்லாமல் தவிக்கும் நிலை நீடித்தது.
2021 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் அரியலூா் வந்திருந்த ஸ்டாலின், ெஜயங்கொண்டம் நிலக்கரித் திட்டம் செய ல்படுத்தவில்லையென்றால் உரியவா்களிடம் நிலத்தை மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளித்தாா்.
அதன்படி தி.மு.க. ஆட்சி அமைந்து ஓராண்டில், நிலத்தை உரியவா்களிடம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளாா் தமிழக முதல்வா் ஸ்டாலின். எந்தக் கட்சியும் போராட்டம் நடத்தாமல், கோரிக்கை வைக்காமல் தான் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளாா் அவா்.
நிலத்தை திரும்பக் கொடுத்ததோடு மாத்திரமல்லாமல், அதற்காக அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையைத் திரும்ப வழங்க வேண்டாம் என்றும் அறிவித்துள்ளாா். இது வரலாற்று சாதனையாகும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.






