என் மலர்
நீங்கள் தேடியது "கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.எம். கட்சியினர் ஆர்ப்பாட்டம்"
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமானூரில் சி.பி.எம். கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் கோவில் எசனை ஊராட்சிக்கு உட்பட்ட விளாகம் கிராமத்தில் மக்கள்நடமாடும் கிராம சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கோவில் எசனை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் புனிதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழுஉறுப்பினர் கிருஷ்ணன் கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோவில் எசனை ஊராட்சிக்கு உட்பட்ட விளாகம் கிராமத்தில் மக்கள்நடமாடும் கிராம சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,
வீதியில் ஓடும்சாக்கடையை தடுத்து நிறுத்தி வீதிகளில் இருபுறமும் வடிகால் வசதி செய்து கொடுக்கவும்,
கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் குடிநீர் வசதி கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.






