search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைகளில் விளக்கு ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்.
    X
    கைகளில் விளக்கு ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்.

    கடம்பூர் அரசு பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்க விழிப்புணர்வு

    கடம்பூர் அரசு பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்க விழிப்புணர்வு நடந்தது.
    ஆத்தூர்:

    தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடத்தப்பட்டு புதிய மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு இக்கூட்டம் நடைபெற்றது. 

    அடுத்த கட்டமாக தொடக்கப்பள்ளிகளில் 50சதவீதம் இன்றும் , மீதமுள்ள பள்ளிகளுக்கு அடுத்தவாரமும் நடைபெற உள்ளது. இதன்படி கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில்  நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டத்தில் பெற்றோர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் பள்ளி தலைமையாசிரியர் என்.டி.செல்வம், கடம்பூர் இல்லம் தேடிக்கல்வி திட்ட தன்னார்வலர்கள் 13 பேர், பள்ளி மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த மீனாம்பிகா மற்றும் கங்காதேவி ஆகியோர் கைகளில் விளக்கேந்தி பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பெற்றோர்கள் அனைவரும் பங்கேற்க நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். 

    மேலும் நேற்று சர்வதேச நடன தினம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விசயமாகும். பெற்றோர்களை நேரில் சந்தித்தும் மாணவர்கள் மூலமும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
    Next Story
    ×