என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
சேலம் லீ பஜார் அருகே சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு
சேலம் லீ பஜார் அருகே சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பால் மோதலை தடுக்க போலீசார் குவிந்தனர்.
சேலம்:
சேலம் அரிசிபாளையம் பகுதியில் லீபஜார் பெயரில் வர்த்தக சங்கம் இயங்கி வருகிறது. இதில் ஏராளமான கடைகள்உள்ளன.சேலம் மாவட்டம் அல்லாமல் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் இங்கே வந்து பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம்.
இதன் அருகிலேயே மார்க்கெட் ரெயில்வே ஸ்டேஷன் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் சேலம் கலெக்டராக இருந்த லீ என்பவர் பெயரில் லீ பஜார் என்ற வர்த்தகமையம் அமைக்கப்பட்டது.
அவரது பெயரிலேயே லீபஜார் என இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது. லீபஜார் வர்த்தக மையம் சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. அதன் அருகிலேயே பாவேந்தர் என்ற தெருவைச் சேர்ந்த சுமார்1000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
லீபஜாரில் 2 ஏக்கரில் ஹவுசிங் போர்டு கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறுப்படுகிறது. அந்த நிலத்தை ஒப்படைக்க கோரி அப்பகுதி மக்கள் கடந்த சிலநாட்களுக்கு முன்பு சுவற்றை அகற்றினர்.வர்த்தக சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் காம்பவுண்டு கட்ட கோர்ட் ஆணை வாங்கி சுவர் கட்டுவதற்காக வேலையை தொடங்கினர்.
இதைபார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் அங்கு கூடியதால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. தகவல்அறிந்த சேலம் தாசில்தார் செம்மலை, வருவாய்த்துறையினர், சூரமங்கலம் உதவி போலீஸ் கமிஷனர் நாகராஜ் ஆகியோர்அங்கு விரைந்து சென்றனர். அங்கு இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Next Story






