
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க செயலாளரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் மாமியார் வடிவழகி வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.
பாசமிகு மாமியாரை இழந்து வாடும் அன்புச் சகோதரர் தளவாய்சுந்தரம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் வடிவழகி அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.