search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    நெல்லை அருகே 5 கிலோ நகை கொள்ளை வழக்கு: கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

    நெல்லை அருகே 5 கிலோ நகை கொள்ளை வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பஜாரில் நகைக்கடை நடத்தி வருபவர் மைதீன் பிச்சை.

    இவர் கடந்த 11-ந்தேதி இரவு கடையை அடைத்துவிட்டு நகை பையை வீட்டுக்கு கொண்டு சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வெட்டிவிட்டு 5 கிலோ தங்கநகையை கொள்ளையடித்து சென்றது.

    இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் குறிப்பிட்ட ஒரு செல்போன் எண் அடிக்கடி அந்த பகுதியில் இருந்து பேசப்பட்டுள்ளதை கண்டறிந்த தனிப்படையினர், அதனை சோதனை செய்து பார்த்தபோது, அந்த நபர் வீரவநல்லூரை அடுத்த பாறையடி காலனியை சேர்ந்த சுதாகர்(வயது 20) என்பதும், அவர் சேரன்மகாதேவியில் உள்ள ஒரு கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வந்தார் என்பதும் தெரியவந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவரது நண்பரான பாறையடி காலனியை சேர்ந்த அழகுசுந்தரம்(35), அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன், மருது ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த கொள்ளையில் தலைவனாக செயல்பட்ட அழகுசுந்தரம் சென்டை மேளம் வைத்து கோவில் விழா மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று தொழில் நடத்தி வருகிறார்.

    அவருடன் சுதாகரும், கல்லூரி விடுமுறையின்போது அவ்வப்போது சென்டைமேளம் ஆர்டருக்கு சென்றுவந்துள்ளார். அப்போது அவர்களுக்கு சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு ஆசை வந்துள்ளது. அதற்காக எங்காவது ரூ.3 லட்சம் வரை கொள்ளையடித்து அதனை வைத்து சொகுசாக வாழலாம் என்று எண்ணி உள்ளனர்.

    அதன்படி நகைக்கடை அதிபர் தினமும் இரவு வீட்டுக்கு பையை எடுத்து செல்வதை அவர்கள் நோட்டமிட்டுள்ளனர். அதில் பணம் தான் கொண்டு செல்கிறார்கள் என்று அவர்கள் நினைத்துள்ளனர். கடந்த 11-ந்தேதி இரவு அழகுசுந்தரம், அந்த பகுதியில் மறைந்து நின்று மைதீன்பிச்சை வீட்டுக்கு புறப்படுவதை தெரிவித்துள்ளார். உடனே சுதாகர், மருது மற்றும் அய்யப்பன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொள்ளையடித்துள்ளனர்.

    பின்னர் மெயின்ரோட்டில் சென்றால் சி.சி.டி.வி. கேமிராவில் தெரிந்துவிடும் என்பதால் கிளாக்குளம் வழியாக வாய்க்கால் கரையில் சென்று காருக்குறிச்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து உதயமார்த்தாண்டபுரம், கிரியம்மாள்புரம் வழியாக திருப்புடைமருதூருக்கு சென்றுள்ளனர். அங்கு தங்களது சென்டை மேளத்திற்குள் அந்த நகைகளை மறைத்து வைத்துள்ளனர். போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த அந்த கும்பல் தலைமறைவாகி உள்ளது என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×