search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு பகுதியில் ரிக் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ள காட்சி.
    X
    பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு பகுதியில் ரிக் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ள காட்சி.

    ரிக் வண்டி உரிமையாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்

    டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ரிக் வண்டி உரிமையாளர்கள் 3-வது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.
    பனமரத்துப்பட்டி: 

    சேலம் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரிக் லாரிகள் ஓடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து டீசல் விலை அதிகரித்து வருகிறது. டீசல் விலை உயர்வால் ரிக் தொழில் நசிந்து வருகிறதாக கூறி ரிக் வண்டி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கிய அவர்கள் இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் செய்தனர். சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு பகுதியில் ரிக் லாரிகள் அனைத்தையும் ஒன்றாக நிறுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். 

    இது குறித்து சேலம் மாவட்ட ரிக் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் தொழில் நசிந்து உள்ளது. இதனால் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறோம். ரிக் லாரி தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால் ரிக் லாரி தொழிலுக்கு மானிய விலையில் டீசல் வழங்க கேட்டுக் கொள்கிறோம்.

    டீசல் விலை உயராமல் இருக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா தொற்றாலும், தொடர்மழை காரணத்தாலும் தொழில் நசிந்து பலர் தற்கொலை செய்துள்ளனர்.இது தவிர டீசல் விலை உயர்வால் பொது மக்களிடமும், விவசாயிகளிடமும் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 

    இந்த தொழில் நசிவடையாமல் இருக்க டீசல் விலையை குறைக்க வேண்டும் அல்லது மானிய விலையில் எங்களுக்கு டீசல் வழங்க வேண்டும். மேலும் ரிக் வண்டி களுக்கு பயன்படுத்தப் படும் ஆயில் மற்றும் உதிரி பாகங் களின் விலை ஏற்றத்தை குறைக்க வேண்டும்.

    ரிக் வண்டி தொழிலுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். இது குறித்து மத்திய மாநில அரசுகள் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×