search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிக் வண்டி"

    ரிக் வண்டி ஏஜென்ட்- உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் அரூர் சேலம் சாலையில் நடைபெற்றது.
    அரூர்:

    அரூர் வட்ட போர்வெல் வாகன ஏஜென்ட் மற்றும் உரிமையாளர்கள்  சங்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
    தொடர்ந்து ஏறி வரும் டீசல் விலையால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக கூறி டீசல் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக போர்வெல் வாகன சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய போராட்டத்தின் போது அரூர் சேலம் சாலையில் போர்வெல் வாகனங்களை நிறுத்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு அரூர் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். ரிக் சங்க தலைவர் தருமபுரி சிவா, திருச்செங்கோடு தலைவர் பாரிகணேஷ், சேலம் தலைவர் சேது ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

    டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் சுமார் 5000 ரிக் வண்டிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன் ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மத்திய அரசு உடனடியாக டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், டீசல் விலை உயர்வால் போர் வெல்போடும் செலவும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் போர்வெல்போட ஒரே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. டீசல் விலையை குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்த்தாமல் தினந்தோறும் உயர்த்தப்படுவதால் அனைத்து வகைகளிலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தனர்.

    இதில் சேலம், திருச்செங்கோடு, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள ரிக் வண்டி உரிமையாளர்கள், ஏஜென்ட்டுகன், சங்க மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் சிவா, சேட்டு, வெங்கடாசலம், தாஸ், வெங்கடேசன், சித்துராஜ், கருணாகரன், ஐதர்அலி, திருப்பதி, ரவி, மாதையன் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அரூர் சங்க ஏஜென்ட் ராஜா செய்திருந்தார்.
    ×