search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்ஜிஆர் சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
    X
    எம்ஜிஆர் சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

    105வது பிறந்தநாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    அ.தி.மு.க.  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னையில் உள்ள கட்சி நிர்வாகிகளும் திரளாக பிறந்த நாள் விழாவில் பங்கேற்றனர். அவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இனிப்புகளை வழங்கினர்.

    இதில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, சின்னையா, மாதவரம் மூர்த்தி, பா.பென்ஜமின், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மாணவரணி மாநில துணை செயலாளர் வக்கீல் பழனி, இலக்கிய அணி மாநில செயலாளர் வைகைச்செல்வன், துணைச் செயலாளர்கள் இ.சி.சேகர், சிவில் முருகேசன், இணை செயலாளர் டி.சிவராஜ்.

    மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வி.என்.ரவி, வேளச்சேரி எம்.கே.அசோக், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி. கந்தன் மற்றும் டாக்டர் சுனில், காரப்பாக்கம் லியோ சுந்தரம், ஏ.எம்.காமராஜ், சைதை எம்.எம்.பாபு, வடசென்னை தெற்கு மேற்கு எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இன்பநாதன், கோயம் பேடு கராத்தே சி.மகேஷ், சி.கே.முருகன், வக்கீல் சதாசிவம், திருமங்கலம் மோகன், ஜி.ஆர்.பி.கோகுல், அயன்புரம் சுரேஷ், மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் நொளம்பூர் இம்மானுவேல், பேரவை செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன், ஆனைக்குட்டி ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    சென்னையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து கொண்டே இருக்கும் நிலையில் ராயப்பேட்டை பகுதியிலும் மழை பெய்தது. பிறந்தநாள் விழா நடைபெற்ற அ.தி.மு.க. தலைமை கழகம் அமைந்துள்ள பகுதியிலும் இன்று காலையில் மழை பெய்து கொண்டே இருந்தது.

    இருப்பினும் கொட்டும் மழையிலும் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. கட்சி தொண்டர்களும், தலைவர்களும் மழையில் நனைந்தபடியே எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தினர்.

    சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி கட்சியினர் தங்களது வீடுகள் முன்பும், பொது இடங்களிலும் எம்.ஜி.ஆர். படத்தை அலங்கரித்து வைத்து மாலை அணிவித்து இருந்தனர்.

    புகைப்படம் முன்பு ஊதுபத்தி, பழங்களை வைத்தும் வழிபட்டனர். பிறந்தநாளை கொண்டாடும் வகையில் எம்.ஜி.ஆர். பாடல்களையும் ஒலிபரப்பினார்கள். இதனால் சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் திரும்பிய திசையெல்லாம் எம்.ஜி.ஆர். பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ் நாட்டு மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆருக்கு புகழஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×