என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
  X
  பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

  மத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்தூர் அருகே சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று கோரிக்வை விடுத்து பொதுமக்கள் இன்று திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  மத்தூர்:
   
  கிருஷணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கண்ணன்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கெட்டம்பட்டி பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் வரவில்லை.  

  இதை கண்டித்து கண்ணன்டஅள்ளி பகுதியில் உள்ள திருவண்ணாமலை, பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் கெட்டம்பட்டி பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  இன்று காலை திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 

  இது குறித்து தகவலறிந்த மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். 

  இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் மறியல் போராட்டம் காரணமாக  அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  Next Story
  ×