என் மலர்
செய்திகள்

எல் முருகன்
சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக தயார் - எல் முருகன்
சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கூறி உள்ளார்.
கோவை:
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கோவை மாநகர் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அவர் கூறியதாவது:-
சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராக இருக்கிறது. மாணவர்களின் சென்டிமென்ட்டை தவறாக திசை திருப்புகிறார்கள்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் தேர்வு நடக்கிறது. மாணவர்களின் உயிருடன் விளையாடக் கூடாது; எல்லா விஷயங்களிலும் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story