என் மலர்
செய்திகள்

புயலால் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிடாதது ஏன்?- சீமான் கேள்வி
பாரதீய ஜனதா வாக்கு அரசியல் நாடகம் நடத்துவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். #seeman #pmmodi #gajacyclone
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிருபர்களிடம் கூறியதாவது:-
மேகதாது அணை கட்டினால் தஞ்சை படுகை விவசாயிகளின் வாழ்வதாரம் மோசமாகி விடும். வரும்பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க. வாக்கு அரசியல் நாடகம் நடத்துகிறது.
கர்நாடக அமைச்சர் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்க கோரி விட்டு அணை பகுதியை பார்வையிடுவது நாடகம். மலைகள், நதிகளை பாதுகாக்க முடியாமல் அழிக்கின்றனர், உருவாக்க முடியாததை ஏன் அழிக்கின்றனர். மணல், மலை போன்றவற்றை 3 அடிக்கு எடுக்க அனுமதி வாங்கி விட்டு 30 அடி தோண்டுகின்றனர்.
8 வழிச்சாலைக்கு நிதி ஒதுக்கும் பிரதமருக்கு ,புயலால் பாதித்த மக்களை பார்வையிடவோ? நிதி ஒதுகவோ நேரம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #seeman #pmmodi #gajacyclone
Next Story