என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி மாணவி உயிரிழப்பு- கயவர்களை கைது செய்ய வேண்டும்: முக ஸ்டாலின் வலியுறுத்தல்
    X

    தருமபுரி மாணவி உயிரிழப்பு- கயவர்களை கைது செய்ய வேண்டும்: முக ஸ்டாலின் வலியுறுத்தல்

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி மாணவி உயிரிழப்புக்கு காரணமான கயவர்களை கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தருமபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும்வேதனை!


    இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்! பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested #DMK #MKStalin
    Next Story
    ×