search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீத்தாராம் யெச்சூரி 13-ந்தேதி சென்னை வருகிறார்
    X

    சீத்தாராம் யெச்சூரி 13-ந்தேதி சென்னை வருகிறார்

    பாரதிய ஜனதா அல்லாத எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்க சீத்தாராம் யெச்சூரி முயற்சி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மு.க.ஸ்டாலினை சந்திக்க சீத்தாராம் யெச்சூரி வருகிற 13-ந்தேதி சென்னை வருகிறார். #MKStalin #SitaramYechury
    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பாரதிய ஜனதா அல்லாத எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இதற்காக ஒவ்வொரு மாநிலமாக சென்று கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    அந்த வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சீத்தாராம் யெச்சூரி வருகிற 13-ந்தேதி சென்னை வருகிறார்.

    பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த ஓரணியில் நிற்க என்னென்ன வியூகம் வகுப்பது என்பது குறித்து அப்போது ஆலோசனை நடத்துகிறார்கள்.


    இந்த சந்திப்பை உறுதி செய்வதற்காக மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவருடன் டி.கே.ரெங்கராஜன் எம்.பி.யும் உடன் சென்றிருந்தார்.

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை சென்னை வந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக பாராளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்து பாடுபட மு.க.ஸ்டாலினுக்கு அவர் அழைப்பு விடுக்க உள்ளார். #DMK #MKStalin #SitaramYechury
    Next Story
    ×