என் மலர்

  செய்திகள்

  வாக்காளர்களை கட்சி உறுப்பினர்கள் என்று தினகரன் பொய் சொல்கிறார்- ஓ.பன்னீர்செல்வம்
  X

  வாக்காளர்களை கட்சி உறுப்பினர்கள் என்று தினகரன் பொய் சொல்கிறார்- ஓ.பன்னீர்செல்வம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாக்காளர்களை கட்சி உறுப்பினர்கள் என்று தினகரன் பொய் சொல்கிறார் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். #ADMK #OPanneerSelvam #TTVDhinakaran
  சென்னை:

  சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 449 கோவில்களில் பொது விருந்து நடந்தது.

  சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நடந்த பொது விருந்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கும் பிரச்சனை முடிந்து போனது. மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மா, கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளராக இருந்தார். அவரது மறைவுக்கு பின் யாருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.

  இதற்கு மாற்றாகத்தான், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.

  இதற்கு அ.தி.மு.க. பொதுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் ஒப்புதல் கொடுத்துள்ளது. சிலர், தேவையில்லாமல் பிரச்சனையை நீதிமன்றம் மூலம் கிளப்பி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த முயற்சி செய்வது எடுபடாது.

  உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம். திருப்பரங்குன்றம், திருவாரூரில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். வேட்பாளர்கள் குறித்து உயர்மட்டக்குழு முடிவெடுத்து அறிவிக்கும்.

  அ.தி.மு.க.வில் முறைப்படி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. நேரில் சென்று உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது.


  ஆனால் டி.டி.வி.தினகரன் வாக்காளர் பட்டியலை வைத்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை செய்து வருகிறார். அது உறுப்பினர் சேர்க்கை ஆகாது. வாக்காளர்களை கட்சி உறுப்பினர்கள் என்று தினகரன் பொய் சொல்கிறார். அனைத்து தேர்தலையும் சந்திக்க அ.தி. மு.க. தயாராக உள்ளது.

  தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போது மருத்துவமனைக்கு செல்லும் முன்பு வீட்டில் நானும், அமைச்சர்களும் சென்று பார்த்தோம். மருத்துவமனையில் முதல்-அமைச்சர் சென்று பார்த்தார்.

  ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடலுக்கு முதல்-அமைச்சர், நான் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினோம். எனவே இந்த பிரச்சனையை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம்.

  இவ்வாறு அவர் கூறினார். #ADMK #OPanneerSelvam #TTVDhinakaran
  Next Story
  ×