என் மலர்

    செய்திகள்

    தமிழகத்தில் பா.ஜ.க. படுதோல்வி அடையும்- ஜெ.தீபா
    X

    தமிழகத்தில் பா.ஜ.க. படுதோல்வி அடையும்- ஜெ.தீபா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா படுதோல்வியை சந்திக்கும் என்று கரூரில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா கூறினார்.
    கரூர்:

    கரூரில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், டி.டி.வி. தினகரன் கட்சியும் பலமாக இருப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் தேர்தல் வந்தால் தான் பலசாலி யார்? பலவீனமானவர் யார்? என்பது தெரியும். மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் அ.தி.மு.க. அரசு இயங்குகிறது. இந்த ஆட்சி கலைக்கப்பட்டால் தமிழக மக்கள் நிம்மதியடைவர்.

    அ.தி.மு.க.வோடு இணைந்து செயல்படுவதற்காகவே அரசியலுக்கு வந்தேன். தேர்தலின் போது தனித்து செயல்படுவதா? அல்லது அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்படுவதா? என்பது குறித்து தெரிவிக்கப்படும். அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பது யார்? என்பது குறித்து தொண்டர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.


    அவ்வாறு எடுத்தால் தான் வரக்கூடிய தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெறும். டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க. என்கிற தனிகட்சியை தான் நடத்துகிறார். அவருக்கும், அ.தி.மு.க.வுக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது. அ.தி. மு.க. தொண்டர்கள் பெரும்பாலானோர் அ.ம.மு.க.வில் இருக்கின்றனர் என்பதற்கு உறுதியான தகவல் இல்லை. அதற்கு எந்த புள்ளிவிவரம் இருக்கிறது? எனவே அதனை ஏற்றுகொள்ள இயலாது.

    அ.தி.மு.க.வை கைப்பற்ற வேண்டும் என்பது என் எண்ணமும் இல்லை. ஆனால் தொண்டர்கள் ஆதரவு எனக்கு பெருமளவு இருக்கிறது. எனக்கும், எனது சகோதரருக்கும் சொத்து பிரச்சனை இல்லை. மாறாக சொத்துகளே பிரச்சனையில் தான் இருக்கிறது. ஜெயலலிதாவை போல் ஆளுமை யாருக்கும் கிடையாது. அவரை போல் நான் வர முடியுமா? என்பது காலம் தான் பதில் சொல்லும்.

    18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் நீதிமன்றம் கூறிய தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு உள்ளது. 3-வது நீதிபதி தீர்ப்பும் மத்திய அரசு என்ன நினைக்கிறதோ அதுவே நடக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. படு தோல்வியை சந்திக்கும். தமிழகத்தில் 8 வழிசாலை அமைப்பது தேவையற்றது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #JDeepa
    Next Story
    ×