என் மலர்
செய்திகள்

சென்னையில் சித்த மருத்துவர் வீடு - ஆஸ்பத்திரியில் வருமானவரித்துறை சோதனை
சென்னையில் சித்த மருத்துவர் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை:
சென்னையில் பிரபல சித்த மருத்துவரான சி.என்.ராஜதுரை கோடம்பாக்கம், கங்காநகர், சிவன்கோவில் தெருவில் சி.என்.ஆர்.ஹெர்ப்ஸ் என்ற பெயரில் தோல் நோய்களுக்கான சித்த மருத்துவ ஆஸ்பத்திரியை நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
அதனடிப்படையில் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சித்த மருத்துவ ஆஸ்பத்திரி மற்றும் தியாகராயநகரில் உள்ள அவருடைய வீட்டில் 6 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் 2 இடங்களில் சோதனை நடந்தபோது அவருக்கு சொந்தமாக டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் எர்ணாகுளம் ஆகிய 5 இடங்களில் உள்ள சித்த மருத்துவ ஆஸ்பத்திரிகளிலும் நேற்று ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இதில் மருந்து விற்பனை தொடர்பான சில ஆவணங்கள் கிடைத்துள்ளது.
விசாரணைக்கு பின்னர் தான் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது? என்பது குறித்த விவரம் தெரிய வரும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. #tamilnews

Next Story