என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தை பணம் அனுப்பாததால் வாலிபர் தற்கொலை
    X

    தந்தை பணம் அனுப்பாததால் வாலிபர் தற்கொலை

    காஞ்சீபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்த வாலிபர் தந்தையிடம் பணம் கேட்டு, அனுப்பாததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
    காஞ்சீபுரம்:

    விழுப்புரம் சென்னை- திருச்சி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் கமலக்கண்ணன்(21). இவர் காஞ்சீபுரம் இளமை நகர் பகுதியில் தங்கியிருந்து காஞ்சீபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவர் தனது தந்தையிடம் தனக்கு பணம் அனுப்பிவிட போன் செய்தார். ஆனால் அவர் பணம் அனுப்ப தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கமலக்கண்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் விரைந்து வந்து பிணத்தை விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×