என் மலர்

    செய்திகள்

    வெவ்வேறு விபத்தில் தொழிலாளி உள்பட 3 பேர் பரிதாப பலி
    X

    வெவ்வேறு விபத்தில் தொழிலாளி உள்பட 3 பேர் பரிதாப பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவையில் வெவ்வேறு விபத்துகளில் நடந்த சம்பவத்தில் தொழிலாளி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கோவை:

    கோவை தொண்டாமத்தூர் அருகே உள்ள மல்லிகை நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 44). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது மகள்களான டென்சி (14), எப்சிபா (11) ஆகியோருடன் ஒரு மொபட்டில் தொண்டாமுத்தூர்- நரசிபுரம் ரோட்டில் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் சென்ற தந்தை, மகள்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே கோபால கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த டென்சி,எப்சிபா ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பாப்பாத்தி (75).

    சம்பவத்தன்று இவர் கோவை- மேட்டுப் பாளையம் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் பாப்பாத்தி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெகமம் அருகே உள்ள கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (57).

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி- பல்லடம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போ ராடிய பழனிசாமியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனிசாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×