என் மலர்
செய்திகள்

கோவில்பட்டி அருகே விபத்தில் தொழிலாளி பலி
கோவில்பட்டி அடுத்த நாலாட்டின்புதூர் அருகே விபத்தில் சிக்கிய தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை:
கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூர் அருகே உள்ள கொம்பன்குளத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டியன்(வயது48). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் விபத்தில் சிக்கிய நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை துரைப்பாண்டியன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






