என் மலர்

  செய்திகள்

  வாலாஜாவில் ஷூ கம்பெனி மேலாளர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளை
  X

  வாலாஜாவில் ஷூ கம்பெனி மேலாளர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாலாஜாவில் ஷூ கம்பெனி மேலாளர் வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  வாலாஜா:

  வேலூர் மாவட்டம் வாலாஜா காந்தி நகர் அம்மூர் ரோட்டை சேர்ந்தவர் வீரகவுடா (வயது 52). ஷூ கம்பெனி மேலாளர். இவரது மனைவி சாந்தி (47).

  நேற்று வழக்கம் போல் வீரகவுடா பணிக்கு சென்று விட்டார். அவரது மனைவி நேற்று மதிய வேளையில் வீட்டை பூட்டி விட்டு, வாலாஜா மார்க்கெட்டிற்கு சென்றார்.

  இந்த நேரத்தில் மர்ம நபர்கள், வீரகவுடாவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்தும், அதிலிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

  மார்க்கெட்டிற்கு சென்ற சாந்தி வீடு திரும்பியபோது, நகைகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, வாலாஜா போலீசில் புகார் அளித்தார்.

  ராணிப்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார் மற்றும் வாலாஜா இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வீரகவுடா வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

  இன்று காலை கைரேகை நிபுணர் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டது. வாலாஜா போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் தரும் பெரும்பாலான புகார்கள் வழக்குப்பதிவு செய்யாமலே கிடப்பில் போடப்படுவதாக புகார் கூறப்படுகிறது.

  கட்டப்பஞ்சாயத்து போன்றவை மூலம் புகார் மனுக்கள் பெறப்படாமல், பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் புகார் தாரர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

  இதுதொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
  Next Story
  ×