என் மலர்
செய்திகள்

பல்லடம் அருகே விபத்து: 2 தொழிலாளிகள் பலி
பல்லடம்:
பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி அடுத்த வெங்கிட்டாபுரத்துக்கு ஹாலோ பிளாக் செங்கல்லை ஏற்றி கொண்டு ஒரு வேன் சென்றது. வேனை பல்லடம் கவுண்டம் பாளையத்தை சேர்ந்த ராமேஸ்வரன் (வயது 40) என்பவர் ஓட்டினார்.
வேனில் தொழிலாளர்கள் ரஞ்சித்குமார் (35), ரெங்கசாமி (40), முருகன் (40), ஆனந்தகுமார் (38) ஆகியோர் இருந்தனர்.
அப்போது நாசுவ பாளையம் பிரிவு ரோட்டில் சென்ற போது எதிரே வந்த லாரி மீது வேன் மோதியது.
இந்த விபத்தில் ராமேஸ்வரன் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் பல்லடம் போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுப்பினர்.
இதில் சிகிச்சை பலனின்றி முருகன், ரெங்கசாமி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.