search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மைய அதிகாரிகள் தகவல்
    X

    தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மைய அதிகாரிகள் தகவல்

    தமிழகத்தின் வடமாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    சென்னை:

    வங்க கடல் பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆந்திராவின் வடக்கு பகுதி நோக்கி நகர்ந்துவிட்டது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் வடமாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல ஏரிகள், குளங்கள் ஓரளவுக்கு நிரம்பி வருகின்றன. ஆனால் தூத்துக்குடி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் மட்டும் போதிய அளவு மழை பெய்யவில்லை. அடுத்த (அக்டோபர்) மாதம் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே இன்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    வங்க கடல் பகுதியில் உருவாகி தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலைகொண்டிருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஆந்திராவின் வடக்கு பகுதிக்கு நகர்ந்து சென்றுவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும்.

    தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×