என் மலர்

  செய்திகள்

  காருக்காக அரசியல் நடத்துபவர் நாஞ்சில் சம்பத்: தமிழிசை கடும் தாக்கு
  X

  காருக்காக அரசியல் நடத்துபவர் நாஞ்சில் சம்பத்: தமிழிசை கடும் தாக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாஞ்சில் சம்பத் தொடர்ந்து பா.ஜனதாவை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அவர் கொள்கைக்காக அரசியல் நடத்தும் அரசியல்வாதி அல்ல. காருக்காக அரசியல் நடத்துபவர் என்று தமிழிசை கூறினார்.

  பல்லடம்:

  பல்லடத்தில் பா.ஜனதா பிரமுகர் இல்ல திருமண விழாவில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார்.

  பின்னர் பா.ஜன தா நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்தார். அதைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் பணிகள் நடைபெறவில்லை.

  இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. வினர் தங்களது உள்கட்சி பிரச்சினைகளை முடித்து கொண்டு மக்கள் பிரச்சினைகளை கவனிக்க வேண்டும்.


  நாஞ்சில் சம்பத் தொடர்ந்து பா.ஜனதாவை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அவர் கொள்கைக்காக அரசியல் நடத்தும் அரசியல்வாதி அல்ல. காருக்காக அரசியல் நடத்துபவர். மேலும் அவரை பற்றி கருத்து கூற விரும்பவில்லை.

  அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் மக்களுக்காக எந்த பணியும் செய்யாமல் வெறும் சினிமா மாயையுடன் நடிகர் கமல் அரசியலுக்கு வருவதை தான் விமர்சிக்கிறோம்.

  தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து வருகிறது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் பா.ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள்.

  Next Story
  ×