search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dinakaran supporter"

    பேனர் வைக்கும் தகராறில் அ.தி.மு.க.-தினகரன் ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ADMK
    போரூர்:

    விருகம்பாக்கம், சாலிகிராமம் அருணாச்சலம் சாலையை சேர்ந்தவர் குணசீலன். டி.டி.வி. தினகரனின் ஆதரவாளரான இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் விருகம்பாக்கம் பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். கேபிள் டி.வி.யும் நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு இவர் தனது காரை சாலிகிராமம், தசரதபுரம் 2-வது தெரிவில் உள்ள கேபிள் டி.வி. அலுவலகம் எதிரே நிறுத்தி இருந்தார்.

    மறுநாள் அதிகாலை வந்த மர்ம கும்பல் கார் கண்ணாடியை உடைத்து தீ வைத்து தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எம்.ஜி.ஆர். நகரில் அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரை குணசீலன் ஆதரவாளர்கள் கிழித்த தகராறில் கார் தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து நேற்று மாலை இரு தரப்பினரையும் விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அ.தி.மு.க.- அ.ம.மு.க. நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு இருந்தனர்.

    திடீரென அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பு உருவானது. போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பேனர் கிழிக்கப்பட்டதாக எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. நிர்வாகி குட்டி என்பவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் தினகரன் ஆதரவாளர்களான முரளி, குணசீலன், சரவணன், கார்த்திக் ஆகியோர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. நிர்வாகி அன்பரசன் புகார் தெரிவித்துள்ளார். அதன்படி தினகரன் ஆதரவாளர்கள் குணசீலன், அம்மன் கோவில் ராஜா, பரணி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இதே போல் தினகரன் ஆதரவாளர் துரைமுருகனும் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அ.தி.மு.க. பிரமுகர் குமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது கூட்டுசதி, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். #ADMK
    ×