என் மலர்

  செய்திகள்

  நாஞ்சில் சம்பத்தின் உருவப்பொம்மையை பா.ஜனதாவினர் எரித்த காட்சி.
  X
  நாஞ்சில் சம்பத்தின் உருவப்பொம்மையை பா.ஜனதாவினர் எரித்த காட்சி.

  நாஞ்சில் சம்பத் உருவ பொம்மை எரிப்பு: பா.ஜனதாவினர் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகர்கோவில் அருகே தோவாளையில் பா.ஜனதா நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு நாஞ்சில் சம்பத்தின் உருவப்பொம்மையை தீவைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
  நாகர்கோவில்:

  அ.தி.மு.க. தினகரன் அணியில் இருக்கும் நாஞ்சில் சம்பத், பா.ஜனதா மாநில தலைவர் தமிழசை சவுந்திரராஜன் பற்றி அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பா.ஜனதாவினர் போலீசில் அளித்த புகாரின்பேரில் சென்னையில் உள்ள 4 போலீஸ் நிலையங்களில் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

  இந்தநிலையில் நாஞ்சில் சம்பத்தின் சொந்த ஊரான குமரி மாவட்டத்திலும் அவருக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாகர்கோவில் அருகே உள்ள தோவாளையில் பா.ஜனதா நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு நாஞ்சில் சம்பத்தின் உருவப்பொம்மையை தீவைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

  போராட்டத்துக்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சொக்கலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் அங்கு விரைந்து சென்று தீவைத்து எரிக்கப்பட்ட உருவப்பொம்மையை கைப்பற்றினர். பின்னர் அங்கு கூடிநின்ற பா.ஜனதாவினரை கலைந்து போகச் செய்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  Next Story
  ×