என் மலர்

    செய்திகள்

    செங்கம் அருகே புதுப்பெண் தற்கொலை
    X

    செங்கம் அருகே புதுப்பெண் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    செங்கம் அருகே உள்ள மன்மலை கிராமத்தில் திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    செங்கம்:

    செங்கம் அடுத்த மன்மலை பகுதியை சேர்ந்த காமராஜ் (வயது26) என்பவர் அதே பகுதியை சேர்ந்த சுமித்ரா (21) என்பவரை கடந்த 5 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த 5 மாதங்களாகவே காமராஜ் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இதனை கண்டித்த சுமித்ராவிற்கும் காமராஜிற்கும் அடிக்கடி மனகசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று இதேபோல் காமராஜ் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுமித்ரா நேற்று இரவு வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து வீட்டின் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சுமித்ராவின் உடலை மீட்டு செங்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனையடுத்து செங்கம் போலீசார் சுமித்ராவின் உடலை செங்கம் அரசு மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×