என் மலர்

  செய்திகள்

  திண்டுக்கல் அருகே சொத்து தகராறில் விவசாயி குத்தி கொலை
  X

  திண்டுக்கல் அருகே சொத்து தகராறில் விவசாயி குத்தி கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் அருகே சொத்து தகராறில் விவசாயி குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  வடமதுரை:

  திண்டுக்கல் அருகில் உள்ள வேல்வார் கோட்டை கிராமம் முத்தனாங் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்புகாளை (வயது62). இவருக்கும் இவரது அண்ணன் அய்யா மலை என்பவருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.

  அய்யாமலை இறந்து விட்டபோதிலும் அவரது மகன் வீரமணிக்கும், சுப்பு காளை குடும்பத்தினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட் டுள்ளது.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரமணியும் அவரது ஆதரவாளர்களும் வீட்டிற்கு வந்து தங்களுக்கு உள்ள பங்கை எழுதி தருமாறு சுப்புகாளையிடம் மிரட்டி சென்றனர்.

  நேற்று இரவு வீட்டில் சுப்பு காளை மற்றும் அவரது மகன் சுந்தரலிங்கம் மற்றும் குடும்பத்தி னருடன் தூங்கிக் கொண் டிருந்தனர். கதவு தட்டும் சத்தம் கேட்டு சுப்புகாளை எழுந்து வந்து கதவை திறந்தார்.

  அப்போது வீரமணியும் அவரது உறவினர் ஒருவரும் சேர்ந்து சுப்புகாளையை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். அவரது அலறல் சத்தம் கேட்டு மகன் சுந்தரலிங்கம் மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்தனர்.

  ஆனால் சுப்புகாளை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுப்புகாளை உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது தொடர்பாக வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் வந்த அன்புசுந்தரம் என்பவரை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×