என் மலர்
செய்திகள்

குறிஞ்சிப்பாடி அருகே தொழிலாளியை வெட்டிய வாலிபர் கைது
குறிஞ்சிப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
குறிச்சிப்பாடியை அடுத்த மீனாட்சிபேட்டையை சேர்ந்தவர் சஞ்சீவ்ராவ்(வயது 45). தொழிலாளி. இவர் அங்குள்ள பாலத்தின் அருகே நடந்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த சரத்(22) மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அப்போது திடீரென்று சஞ்சீவ்ராவ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதுதொடர்பாக அவர் சரத்திடம் தட்டிக்கேட்டார். இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த சரத் கத்தியால் சஞ்சீவ்ராவ் முகத்தில் வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்தை கைது செய்தனர்.

Next Story