என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிக்கு நாளை அன்புமணி வருகை: பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
    X

    பவானிக்கு நாளை அன்புமணி வருகை: பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

    பவானியில் நாளை பா.ம.க. சார்பில் விழிப்புணர்வு பிரச்சார பேரணியும், இரவு பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அன்புமணி, ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

    பவானி:

    பவானியில் நாளை (28-ந்தேதி) பா.ம.க. சார்பில் மாலை விழிப்புணர்வு பிரச்சார பேரணியும், இரவு பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

    எனவே இக்கூட்டத்திற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை பொருப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் மு.வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் கோபால் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

    Next Story
    ×