என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
மாட்டிறைச்சி விவகாரம்: முதல்வருக்கு எதிர்ப்பு - பேரவையில் திமுக, அதிமுக தோழமை கட்சிகள் வெளிநடப்பு
By
மாலை மலர்20 Jun 2017 6:45 AM GMT (Updated: 20 Jun 2017 10:40 AM GMT)

கால்நடை சந்தை கட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக, அதிமுக தோழமை கட்சிகளும் வெளிநடப்பு செய்துள்ளது.
சென்னை:
கால்நடை சந்தை கட்டுப்பாட்டுக்கு எதிராக பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதில், கால்நடை சந்தை கட்டுப்பாட்டால் விவசாயிகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும், அதனால், கால்நடை சந்தை கட்டுப்பாட்டுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
மத்திய அரசின் கால்நடை சந்தைக் கட்டுப்பாட்டு சட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் மற்றும் அதிமுக தோழமை கட்சிகள் வலியுறுத்தின.
ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ”பெரும்பான்மையான மக்களின் விருப்பப்படி தமிழக அரசின் நிலைப்பாடு இருக்கும். தமிழகத்தில் பசுவதை தடுப்பு சட்டம் 40 ஆண்டுகளாக அமலில் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு தமிழக அரசின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும்” என்றார்.
ஆனால், முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல், சட்டசபையில் இருந்து அதிமுக தோழமை கட்சிகளான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படையும் வெளிநடப்பு செய்தன.
Next Story
×