என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறை அருகே திரௌபதியம்மன் கோவில் தேர் தீப்பிடித்து எரிந்து சேதம்
    X

    செந்துறை அருகே திரௌபதியம்மன் கோவில் தேர் தீப்பிடித்து எரிந்து சேதம்

    செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது தேர் திடிரென தீப்பிடித்து எரிந்த்தால் பொதுமக்கள் சோகம்அடைந்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மே 26 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதுநாள் முதல் மகா பாரதம் பாடப்பட்டு தினமும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜைகள் நடந்து வந்தன. நேற்று தீ மிதித்த பின்பு பக்தர்கள் தேர் இழுக்க காத்து இருந்தனர்.

    இந்நிலையில் மாலை பக்தர்கள் தீமிதித்து முடிந்த போது அருகே நின்ற தேரில் மாவிளக்கு தீ தேரின் தொம்பையில் பட்டு தீ மள மளவென்று பரவி தேர் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

    இது குறித்து தகவலறிந்த வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர் வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தேரில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்திய உள்ளது. 
    Next Story
    ×