என் மலர்

    செய்திகள்

    மதுரையில் நடந்த கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியபோது எடுத்த படம்.
    X
    மதுரையில் நடந்த கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியபோது எடுத்த படம்.

    மாட்டு இறைச்சிக்கு தடை உத்தரவு: சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கை- நாஞ்சில் சம்பத்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது. இது சிறுபான்மை இன மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
    மதுரை:

    அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் ரெயில்வே பரமன்நாதன் தலைமை தாங்கினார்.

    கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க.வை ஜெயலலிதா வழிநடத்தி செல்ல பெரும்பங்காற்றியவர் சசிகலா. ஆனால் கட்சியிலோ ஆட்சியிலோ அவர் ஆர்வம் காட்டவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அரசியலுக்குவர வாசல் அமைத்து கொடுத்தவர் சசிகலா.

    ஆனால் பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வையும், சசிகலாவையும் அழிக்கப் பார்க்கிறார். அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்.

    ஜெயலலிதா இறந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம், பொன்னையன், மதுசூதனன் போன்றவர்கள்தான் சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் வரவேண்டும் என்று வற்புறுத்தினர். ஆனால் திடீரென பா.ஜனதா உத்தரவுக்கு அடிபணிந்து பன்னீர் செல்வம் சசிகலாவை எதிர்த்தார்.


    பா.ஜனதா தூண்டுதலோடு அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும் பன்னீர்செல்வம் பாரதிய ஜனதாவில் சேருவதுதான் நல்லது. எடப்பாடி பழனிச் சாமி அரசுக்கு 123 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது. எனவே பன்னீர்செல்வத்தின் ஆதரவு தேவையில்லை.

    மத்திய அரசு மனிதனை விட்டு விட்டு மாடுகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் நோன்பு பெருநாளை தொடங்க உள்ள நிலையில் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது. இது சிறுபான்மை இன மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கை ஆகும்.

    யார் என்ன உணவு உண்ண வேண்டும் என்பது அவர்களது தனிப்பட்ட உரிமை. அந்த வி‌ஷயத்தில் அரசு அதிகாரம் செலுத்த முடியாது. எனவே மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். எந்த வொரு வழக்கிலும் லஞ்சம் வாங்கியவர்களைதான் போலீசார் கைது செய்வார்கள். ஆனால் டெல்லி போலீசார் முதன் முறையாக லஞ்சம் கொடுத்ததாக தினகரனை கைது செய்து இருக்கிறார்கள். இது திட்டமிட்ட சதி. அவருக்கு ஜாமீன் வழங்காமல் வழக்கு விசாரணையையும் இழுத்தடிக்கிறார்கள்.

    கட்சியை ஜெயலலிதா வழியில் நடத்த தகுதி படைத்தவர்கள் சசிகலாவும், தினகரனும் தான். பன்னீர்செல்வத்தின் துரோகம் ஒருநாளும் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜாங்கம், மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    Next Story
    ×