என் மலர்
செய்திகள்

குத்தாலம் அருகே குளத்தில் மணல் அள்ளி விற்பதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
குத்தாலம் அருகே குளத்தில் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு மணல் அள்ளி விற்பதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
குத்தாலம்:
விவசாயிகள் பயன் பெறும் வகையில் விவசாய நிலங்களை செம்மைப்படுத்தவும், ஏரி, குளங்களில் அதிக அளவில் தண்ணீரை சேமிக்கவும் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் மற்றும் அணைகளை தூர்வாரி, தூர்வாரும் வண்டல் மண் அல்லது சவுடு மண்ணை இலவசமாக விவசாய நிலங்கள், வீட்டு பயன்பாடு மற்றும் மண்பாண்ட தொழில் செய்பவர்கள் தாசில்தாரின் அனுமதியுடன் பயன் படுத்திக்கொள்ள தமிழக அரசு சமீபத்தில் ஆணையிட்டது.
இந்நிலையில் நாகை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் உள்ள புளியகுளத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணியை அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக குளத்தில் உள்ள வண்டல் மண்ணை அள்ளுவதற்கு பதிலாக, 5 அடி ஆழத்திற்கு மேல், ஜே.சி.பி. எந்திரம் கொண்டு மணலை அள்ளி விற்பனை செய்வதாக குற்றம் சாட்டு எழுந்தது. இதையடுத்து இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இப்பணியை தடுத்து நிறுத்தினர்.
தகவலறிந்து வந்த வருவாய் துறையினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் உத்திராபதி, ஒன்றிய தலைவர் மாரிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை தலைவர் அன்பழகன் மற்றும் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story