என் மலர்
செய்திகள்

வேலூரில் சூறைக்காற்றுடன் மழை: மின்னல் தாக்கி மாணவன் பலி
வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை பல இடங்களில் பரவலாக சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் மாணவன் ஒருவன் மின்னல் தாக்கி பலியானார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை பல இடங்களில் பரவலாக சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதேபோல் பள்ளிகொண்டா பகுதியிலும் பலத்த மழை பெய்தது.
அப்போது அங்குள்ள பழமை வாய்ந்த உத்திர ரங்கநாதர் கோவிலின் கொடிமரம் திடீரென சாய்ந்தது. அந்த நேரத்தில், அவ்விடத்தில் பக்தர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவங்கள் நிகழவில்லை.
எனினும், கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் மற்றும் அங்கிருந்த கோவில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் கொடிமரம் சாய்ந்ததால், அபசகுணம் நடந்து விட்டதாக கருதிய பக்தர்கள் பீதியடைந்தனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் பலர் அவசர அவசரமாக கோவிலில் இருந்து வெளியேறி விட்டனர்.

இக்கொடிமரம் 2013-ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின்போது நடப்பட்டது. 33½ அடி உயரம் கொண்டது. அதில் 80 கிலோ எடையிலான தாமிர தகடு பதிக்கப்பட்டுள்ளது. கொடிமரம் கீழே விழுந்ததால், கோவிலில் பரிகார பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உள்ளது. இன்னும், ஓரிரு மாதங்களில் புதிய கொடிமரம் நடப்படுகிறது.
மேலும் பள்ளிகொண்டா பகுதியில் பல இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. பலத்த காற்றால் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த கடைகளின் விளம்பர பலகைகள் கீழே சரிந்தன. மழையால் பள்ளிகொண்டா, வெட்டுவாணம், ஒதியத்தூர், பிராமணமங்கலம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின.
திருப்பத்தூர் அருகே வேப்பல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், கட்டிட தொழிலாளி. இவரது மகன் லட்சுமணன் (வயது 13), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். பக்கத்து வீட்டை சேர்ந்த சின்னதுரையின் மகன் கோவிந்தராஜ் (16), மகள் வரலட்சுமி (5), ரங்கநாதனின் மகன் தேவன் (16), முனுசாமியின் மகன் கார்த்திக் (10). இவர்கள் 5 பேரும் நேற்று மாலை லட்சுமணனின் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது கரு மேகங்கள் சூழ்ந்தபடி இடி, மின்னலுமாக இருந்தது.
திடீரென லட்சுமணனின் வீட்டின் அருகில் மின்னல் தாக்கியது. இதில் விளையாடி கொண்டிருந்த லட்சுமணன், கோவிந்தராஜ், வரலட்சுமி, தேவன், கார்த்திக் ஆகிய 5 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

மயங்கிய நிலையில் இருந்த சிறுவர்கள் 5 பேரையம் மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். செல்லும் வழியில் லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரும் வாணியம்பாடியில் இருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர், தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story