என் மலர்

  செய்திகள்

  எல்.முருகன்
  X
  எல்.முருகன்

  தொகுதிகளை பெறுவதில் அதிமுகவுடன் சமரசம் செய்து கொண்டது ஏன்?- எல்.முருகன் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளது. 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று எல் முருகன் கூறியுள்ளார்.

  பழனி:

  தாராபுரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் இன்று பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளது. 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

  தேர்தல் கூட்டணியின் போது திருவண்ணாமலை மற்றும் அறுபடை வீடுகள் அமைந்துள்ள தொகுதிகளை அ.தி.மு.க. தலைமையிடம் கேட்டோம். ஆனால் அதில் ஒரு சில தொகுதிகளை மட்டுமே எங்களுக்கு அ.தி.மு.க. ஒதுக்கியது. கூட்டணி தர்மத்துக்காக சில வி‌ஷயங்களை சமரசம் செய்து கொள்ள வேண்டும். அதன்படிதான் நாங்கள் கிடைத்த தொகுதிகளில் வெற்றிக்காக பாடுபடுவோம்.

  அ.தி.மு.க. மற்றும் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் பா.ஜ.க. நிர்வாகிகள் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.

  தாராபுரத்தில் தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. வருமான வரித்துறை சோதனை நடப்பது குறித்த தகவல் கூட எனக்கு தெரியாது. நான் எனது தொகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். 

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×