search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோச்சடை பகுதியில் தூய்மைப்பணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
    X
    கோச்சடை பகுதியில் தூய்மைப்பணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    காந்தி கண்ட கனவை மோடி நிறைவேற்றி வருகிறார்- பொன்.ராதாகிருஷ்ணன்

    காந்தி கண்ட கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #BJP #PonRadhakrishnan
    மதுரை:

    மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி 4 ஆண்டுகள் முடிந்து 5-வது ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் இதை கொண்டாடும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

    மதுரை கோச்சடையில் நடைபெற்ற தூய்மை பணியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-வது ஆண்டு தொடக்கம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

    இந்தியாவை உலக அளவில் முதல்நிலை நாடாக மாற்றுவதற்கு பிரதமர் மோடி மிகப்பெரிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தூய்மை நிறைந்த இந்தியாவை உருவாக்கும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டுவந்தது மட்டுமின்றி, பிரதமர் மோடி தனது கையிலே துடப்பத்தை எடுத்து சுத்தம் செய்தார்.

    தூய்மை இந்தியா திட்டத்தினால் உலக அளவில் இந்தியாவிற்கு பல மடங்கு பெருமை அதிகரித்துள்ளது. இன்று நாடு முழுவதும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, உறுப்பினர்கள், பாரதிய ஜனதா ஆளும் 21 மாநில முதல்-அமைச்சர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற, மேலவை உறுப்பினர்கள், பாரதிய ஜனதா தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.


    சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று காந்தி கனவு கண்டாரோ அந்த கனவுகளை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பல மடங்கு பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இன்றைக்கு தூய்மைப்படுத்தப்பட்டுள்ள மதுரை கோச்சடை பகுதி ஒரு ஆண்டாக குப்பைகளை அகற்றாத பகுதியாகும். இதேபோன்று எல்லா இடங்களிலும் தூய்மை பணியை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan
    Next Story
    ×