என் மலர்tooltip icon

    செய்திகள்

    உண்ணாவிரதத்தில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்ட காட்சி.
    X
    உண்ணாவிரதத்தில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்ட காட்சி.

    மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்- அமைச்சர் செங்கோட்டையன்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மூலம் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

    உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது :-

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

    இதற்காக எங்கள் (அ.தி.மு.க.) எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து பாராளுமன்றத்தையே முடக்கினார்கள். பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி அழுத்தம் கொடுத்தனர்.

    இதன் தொடர்ச்சியாக இப்போது அ.தி.மு.க.வினர் பொதுமக்களுடன் இணைந்து இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறோம்.

    இங்கே கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பொது மக்களும் பலர் இங்கே வந்து கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள்.

    அந்த வகையில் இந்த உண்ணாவிரத போராட்டம் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கொண்டிருக்கிறோம்.

    இனி அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம்? என்று முதல்வருடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #Tamilnews
    Next Story
    ×