search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி விவகாரத்தில் இழுபறி நீடிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை
    X

    காவிரி விவகாரத்தில் இழுபறி நீடிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

    காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் இழுபறி நீடிக்கும் சூழ்நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். #CauveryIssue
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார காலகெடு நாளை (வியாழக்கிழமை) முடிகிறது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில், நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.

    இதற்கிடையே தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை உச்ச நீதிமன்றம் தீர்க்க வேண்டும் என சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்திருப்பதால் புதிய சிக்கல் உருவாகி உள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் 31-ம் தேதி மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  நாளை மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  இன்றே அவர் ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால், அமைச்சர்கள் பலர் வெளியூர்களில் இருப்பதால், நாளை ஆலோசனை நடத்துகிறார்.

    அப்போது மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும்,  மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால்  மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. #CauveryIssue #Tamilnews
    Next Story
    ×