என் மலர்

  செய்திகள்

  ரஜினியும், கமலும் முகவரி இல்லாமல் தொலைந்து போவார்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  X

  ரஜினியும், கமலும் முகவரி இல்லாமல் தொலைந்து போவார்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசியலில் ரஜினியும், கமலும் முகவரி இல்லாமல் தொலைந்து போவார்கள் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். #Rajini #Kamal
  சிவகாசி:

  சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

  தமிழகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஜெயலலிதாவின் வழியில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த ஆட்சியை பிரதமரும், கவர்னரும் பாராட்டி உள்ளனர்.

  நடிகர் டி. ராஜேந்தர், ஜெயலலிதா சிலை குறித்து கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதாவின் சிலையை மாற்றி அமைப்பதில் எங்களுக்கு இல்லாத அக்கறை அவருக்கு ஏன் திடீரென வந்தது? ஜெயலலிதா சிலையை மாற்றி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

  அ.தி.மு.க.வில் இளைஞர்கள் ஆர்வமுடன் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். எனவே எங்கள் இயக்கத்தை எந்த காலத்திலும் யாராலும் அழிக்க முடியாது.


  “ஆயுதத்தை தூக்கு, துப்பாக்கி ஏந்து” என சினிமாவில் வசனம் பேசுவது போல் அரசியலிலும் கமல்ஹாசன் பேசி வருகிறார். அவரது பேச்சு இங்கு எடுபடாது. அவர் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். மேலும் நடைமுறைக்கு சாத்தியமில்லாததையும் சொல்லி வருகிறார். அவரை இளைஞர்கள் நம்ப தயாராக இல்லை.

  இவ்வாறு அவர் கூறினார்.

  முன்னதாக ராஜபாளையத்தில் நடந்த கூட்டத்திலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கமல்ஹாசனை கடுமையாக தாக்கி பேசினார்.

  அவர் பேசுகையில் பிறந்த ஊரான பரமக்குடியை 45 வரு‌ஷமாக எட்டிக்கூட பார்க்காதவர் அரசியல் கட்சி தொடங்கும் போது மட்டும் பரமக்குடிக்கு வருவாராம். மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. கர்மத்தை கழிக்கத் தான் ராமேசுவரத்துக்கு செல்வார்கள். கமலும் அதற்கு தான் சென்றுள்ளார்.

  கமல்ஹாசன் ஒற்றை ஆளாக அரசியலில் காணாமல் போவது உறுதி. நடிகரை பார்க்க வருகிற கூட்டம்கூட மதுரை பொதுக்கூட்டத்திற்கு வரவில்லை.

  அரசியலில் ரஜினியும், கமலும் முகவரி இல்லாமல் தொலைந்து போவார்கள் என்றார். #Tamilnews
  Next Story
  ×