என் மலர்

  செய்திகள்

  பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார்
  X

  பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் இன்று காலை சென்னை வந்தடைந்தார். விரைவில் அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
  சென்னை:

  ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் இன்று காலை சென்னை வந்தடைந்தார். விரைவில் அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.  மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலுக்கு ராம்நாத் கோவிந்த் சென்றார்.

  அங்கு புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.யிடம் ஆதரவு திரட்டினார். இந்த கூட்டத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே ஒரு பா.ஜனதா எம்.பி.யான ஓ.ராஜகோபாலும் வந்திருந்தார். அவரிடமும் ராம்நாத் கோவிந்த் ஆதரவு திரட்டினார்.

  அ.தி.மு.க.வின் இரு அணிகளை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இரு அணியினரையும் தனித்தனியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  Next Story
  ×