என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடை விடுமுறை என்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.
    • தற்போது தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்தது.

    தற்போது தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் தரிசனம் செய்யாததால் தற்போது ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதற்கு முன்பு சென்னையில் இருந்து ஒரு நாளைக்கு 100 பக்தர்கள் வரை தரிசனத்திற்கு சென்று வந்தனர். ஆனால் தற்போது தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி சென்று வருகின்றனர்.

    இதேபோல் அனைத்து ஊர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீண்ட தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    எனவே இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்க வேண்டும் என பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேவஸ்தான அதிகாரிகளும் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 76,425 பேர் தரிசனம் செய்தனர். 36,053 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.15 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

    • ஐதராபாத்தில் கடந்த வாரம் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமியை காரில் கடத்திச் சென்று 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
    • ஐதராபாத்தில் மீண்டும் ஒரு சிறுமி காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பதி:

    ஐதராபாத்தில் கடந்த வாரம் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமியை காரில் கடத்திச் சென்று 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தில் அரசியல் பிரமுகர்களின் மகன்கள் ஈடுபட்டதாக தெலுங்கானா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் எதிர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் ஐதராபாத்தில் மீண்டும் ஒரு சிறுமி காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    ஐதராபாத், பகாடி ஷரிப், ஷகினா நகர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. சிறுமியின் தாய் மாமா வீடு சுல்தான் ஷகி பகுதியில் உள்ளது. கடந்த மாதம் 31-ந் தேதி மாலை 6 மணிக்கு தனது தாய் மாமா வீட்டிற்கு சென்றார்.

    இரவு 8 மணி அளவில் மீண்டும் தனது வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். ஷெரிப் காமன் என்ற இடத்தில் வந்த போது, காரில் வந்த டிரைவர் காரை நிறுத்திவிட்டு சிறுமியிடம் இரவு நேரத்தில் தனியாக எங்கே செல்கிறாய் என்று விசாரித்தார்.

    அப்போது சிறுமி தன்னுடைய வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார். சிறுமியை காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக கார் டிரைவர் தெரிவித்தார்.

    இதனை நம்பிய சிறுமி காரில் ஏறி உட்கார்ந்தார். அப்போது கார் டிரைவர் தனது நண்பரான முகமத் ருக்தே அஹமதிற்கு போன் செய்து வரும் வழியில் காரில் ஏறிக் கொள்ளும்படி தெரிவித்தார். அவரது நண்பரும் வழியில் காரில் ஏறிக்கொண்டார். இதையடுத்து கார் டிரைவர் தனது வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். பின்னர் கார் டிரைவர் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    நள்ளிரவு 12 மணிவரை சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர்.சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அதிகாலை 5 மணி அளவில் சுல்தான் ஷகி அருகே சிறுமியை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றனர். அந்த வழியாக சென்றவர்கள் சிறுமி மயக்கமடைந்து கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இதில் கார் டிரைவர் ஷேக் கலீம் ஹாலி மற்றும் அவரது நண்பர் முஹமத் ருக்தே அஹமத் இருவரும் சிறுமியை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஐதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த சிறுமி கற்பழிப்பு சம்பவங்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×