என் மலர்
ஆந்திர பிரதேசம்
- சாமிக்கு பூஜை செய்ய செல்லும்போது மட்டும் மூலவர் தெரியும் அளவு தண்ணீர் வற்றி விடும்.
- மகா சிவராத்திரிக்குள் கோவிலை சுற்றி தண்ணீர் வற்றிவிடும் என நம்பப்படுகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், கொத்தப்பள்ளி அருகே கிருஷ்ணா ஆற்றின் நடுவில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளது.
கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஜூலை மாதம் சிவன் கோவில் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது. சிவன் கோயில் தண்ணீரில் மூழ்கியதால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சிவன் கோவில் மெல்ல மெல்ல வெளியே தெரிகிறது. இதையடுத்து கோவில் பூசாரி ராகவா சர்மா படகில் சென்று சாமிக்கு பூஜைகள் செய்கிறார்.
சாமிக்கு பூஜை செய்ய செல்லும்போது மட்டும் மூலவர் தெரியும் அளவு தண்ணீர் வற்றி விடுவதாகவும் பூஜைகள் செய்து முடித்து வெளியே வந்த பிறகு கருவறையை தண்ணீர் சூழ்ந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. மகா சிவராத்திரிக்குள் கோவிலை சுற்றி தண்ணீர் வற்றிவிடும் என நம்பப்படுகிறது.
- வாலிபர் தன்னுடைய நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து அறைக்கு வரவழைத்தார்.
- 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் விஜயவாடா பெங்கி சர்க்கிளில் உள்ள ஷாப்பிங் மாலில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
அங்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வேலை செய்து வருகிறார். பணிக்கு சென்று வரும்போது இளம்பெண்ணுக்கும் வாலிபருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணிடம் நைசாக பேசிய வாலிபர் அவரை கானூர் சனத் நகரில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அறைக்குச் சென்றதும் இளம்பெண்ணும் வாலிபரும் சேர்ந்து மது அருந்தினர்.
இதையடுத்து வாலிபர் தன்னுடைய நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து அறைக்கு வரவழைத்தார். 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். தொடர்ந்து இளம்பெண்ணை அறையில் அடைத்து வைத்து 3 நாட்களாக வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தனர்.
இதனால் இளம்பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இளம்பெண்ணை தூக்கி வந்து அங்குள்ள சாலையோரம் வீசிவிட்டு 4 பேரும் தப்பிச் சென்றனர்.
அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரம் இளம்பெண் படுத்து கிடப்பதை கண்டு பெனுமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் விஜயவாடாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு.
- துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரி தகவல்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டணம் சிலகலப்புடி ரெயில் நிலையம் அருகே அரசு சிறுபான்மையினர் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இதில் மசூலிப்பட்டணத்தை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியின் விடுதி அறையில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த்பாபு இரவு நேரங்களில் பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனை கவனித்த மாணவர்கள், அதனை செல்போனில் வீடியோ எடுத்து மற்ற மாணவர்ளுக்கு பகிர்ந்துள்ளனர். மாணவர்கள் வீடியோ எடுத்ததை அறிந்த தலைமை ஆசிரியர் அவர்களை சரமாரியாக தாக்கி உள்ளார். சில மாணவர்கள் அடிக்கு பயந்து உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.
இந்நிலையில், தலைமை ஆசிரியரின் உல்லாச வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இதை அறிந்த சிலகலப்புடி போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் ஆனந்த்பாபுவை கைது செய்தனர். இந்நிலையில் உல்லாச வீடியோ குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
- போட்டியில் 19 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
- மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும் என அமைச்சர் ரோஜா கூறினார்.
திருப்பதி:
விஜயவாடாவில் உள்ள உடா சிறுவர் பூங்காவில் நடந்த 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசாவும் முதல் பரிசை வென்றன.
விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆந்திராவில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை கொண்டு இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த போட்டியில் 19 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும் என்றார்.
பின்னர் அமைச்சர் ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துச்சண்டை விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
அப்போது எதிர்த்து விளையாடியவர் முகத்தில் ஒரு குத்து விட்டார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
கடந்த மாதம் ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ரோஜா கலைக்குழு பெண்களுடன் மேடையில் நடனமாடி உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- 22-ந்தேதி தொடங்கி 2023 ஜனவரி 15-ந்தேதி வரை 25 நாட்கள் நடக்கிறது.
- 25-வது நாள் ஆத்யாயன உற்சவம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் ஆத்யாயன உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆத்யாயன உற்சவம் வருகிற 22-ந்தேதி தொடங்கி 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி வரை 25 நாட்கள் நடக்கிறது. இந்தத் திருவிழா வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்கள் முன்பு தொடங்கி நடக்கும் விழாவாகும்.
நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள் எனப்படும் 12 ஆழ்வார்கள் எழுதிய 4 ஆயிரம் பாசுரங்கள் இந்த 25 நாட்களிலும் வைஷ்ணவர்களால் தினமும் ஓதப்படுவது இந்த விழாவின் தனிச்சிறப்பாகும்.
25 நாட்கள் நடக்கும் விழாவில் முதல் 11 நாட்கள், 'பகல் பத்து' என்றும், அடுத்த 10 நாட்கள், 'ராப்பத்து' என்றும் அழைக்கப்படுகிறது. 22-வது நாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு, 23-வது நாள் ராமானுஜ நூற்றந்தாதி, 24-வது நாள் வராஹ சாமி சாத்துமுறை, 25-வது நாள் ஆத்யாயன உற்சவம் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆக்டோபஸ் படையில் உள்ள ஜெகதீஷ் என்பவர் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்வதுகுறித்து ஒத்திகை செய்து கொண்டு இருந்தார்.
- ஒத்திகையின் போது வெடிகுண்டு வெடித்து ஆக்டோபஸ் படை வீரர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவும், அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் தடுப்பதற்காகவும் ஆக்டோபஸ் அதிரடி படை எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று திருமலையில் ஆக்டோபஸ் படையினருக்கு வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்வது, வெடி விபத்தில் சிக்குபவர்களை மீட்பது, கலவரத்தின் போது கண்ணீர் புகை குண்டு வீசுவது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
ஆக்டோபஸ் படையில் உள்ள ஜெகதீஷ் என்பவர் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்வதுகுறித்து ஒத்திகை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது.
இதில் ஜெகதீஷின் கைகள், கால்கள் பலத்த சேதம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற வீரர்கள் அவரை மீட்டு உடனடியாக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஜெகதீஷ் கடந்த 12 ஆண்டுகளாக பாதுகாப்பு படையில் மிகச் சிறப்பான முறையில் பணியாற்றி வந்ததாகவும், தற்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியதாகவும் அவருடன் பணியாற்றும் சக வீரர்கள் தெரிவித்தனர்.
ஒத்திகையின் போது வெடிகுண்டு வெடித்து ஆக்டோபஸ் படை வீரர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஆற்றின் கரையோரம் குளித்துக் கொண்டிருந்த தோட்ட சுரேஷ் திடீரென மணல் அள்ள தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார்.
- ஒரே பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், யானை மலைக்கு குடு பகுதியை சேர்ந்தவர்கள் தோட்ட சுரேஷ் (வயது 15), குணசேகர் (14), பாஜி (14), உசேன் (14), பாலு (17). பள்ளி கல்லூரி மாணவர்களான 5 பேரும் கிருஷ்ணா நதியில் குளிப்பதற்காக சென்றனர்.
ஆற்றில் மணல் அள்ளப்பட்டு இருந்ததால் ஆங்காங்கே பெரிய பெரிய பள்ளங்கள் இருந்தது. தற்போது அதிக அளவில் தண்ணீர் சென்று கொண்டு இருப்பதால் ஆற்றில் இருந்த பள்ளங்கள் தெரியவில்லை.
இந்த நிலையில் ஆற்றின் கரையோரம் குளித்துக் கொண்டிருந்த தோட்ட சுரேஷ் திடீரென மணல் அள்ள தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார்.
இதனை கண்ட சக நண்பர்கள் தோட்ட சுரேஷை காப்பாற்றுவதற்காக சென்றபோது நீச்சல் தெரியாமல் அவர்களும் தண்ணீரில் மூழ்கி அபய குரல் எழுப்பினர். அங்கிருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ஆனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. 5 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதில் தோட்ட சுரேஷ், குணசேகர் ஆகிய 2 பேர் உடலையும் பொதுமக்கள் மீட்டனர்.
அதற்குள் இரவு நேரம் ஆகிவிட்டதால் மற்றவர்கள் உடல்களை மீட்க முடியவில்லை. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையே சேர்ந்த 18 வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுடன் சேர்ந்து உள்ளூர் மீனவர்களும் ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணி நடந்தது.
நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவர்கள் தண்ணீரில் மூழ்கிய இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் பாலு, பாஜி, உசேன் ஆகிய 3 பேரின் பிணங்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட மாணவர்களின் உடலை பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
ஒரே பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சித்தூர் மாவட்ட வனப்பகுதிகளில் இந்த யானைகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன.
- மின் கம்பிகள் வாயில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி யானை இறந்தது.
திருப்பதி:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகம் ஆந்திர வனப்பகுதியில் காட்டு யானை கூட்டம் ஒன்று சுற்றி தெரிகிறது.
கடந்த வாரம் தமிழகத்திற்குள் இருந்தது. காட்டு யானைகள் ஆந்திர வன பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.
சித்தூர் மாவட்ட வனப்பகுதிகளில் இந்த யானைகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன.
இந்த கூட்டத்தை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை நேற்று தனது கூட்டத்தை விட்டு தனியாக பிரிந்து சென்றது, சித்தூரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள பங்காருபாலம் மண்டலம், கோடலமடுகு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் அந்த யானை சென்றது.
நெல் வயலில் புகுந்த பெண் யானை, அங்குள்ள மின் மோட்டாரின் கம்பிகளை இழுக்க முயன்றது.
மின் கம்பிகள் வாயில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி யானை இறந்தது.
இதுபற்றி தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
கால்நடை மருத்துவர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேத பரிசோதனை செய்தனர். கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
யானை உடலை வயலில் புதைத்து, இறுதிச்சடங்கு செய்தனர்.
- சரணுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
- மருத்துவ பரிசோதனையில் மாதவிக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடே பள்ளியை சேர்ந்தவர் சரண் (வயது 35) இவரும் மாதவி (32) என்பவருக்கும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் சரணுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரை திருமணம் செய்து கொள்ள சரண் முடிவு செய்தார்.
இதற்கு மாதவி இடையூறாக இருப்பார் என்பதால் அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட வைக்க வேண்டும் என முடிவு செய்தார்.
மாதவியிடம் என்னுடைய தம்பிகளுக்கு ஆண் குழந்தைகள் உள்ளனர். நமக்கு பெண் குழந்தை மட்டுமே உள்ளது. நாம் இறந்தால் மகன் தான் இறுதி சடங்கு செய்ய வேண்டும்.
எனவே நமக்கு ஆண் குழந்தை வேண்டும் என கூறினார். இதற்காக மங்களகிரியை சேர்ந்த டாக்டர் ஒருவர் உதவியுடன் சத்து மருந்து கிடைப்பதாக கூறி அழைத்துச் சென்றார்.
அங்கு வைத்து மாதவிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தினார். அதற்குப் பிறகு மாதவி உடல் சோர்வு ஏற்பட்டு பாதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் மாதவி அதிர்ச்சி அடைந்தார்.
கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் என்னை ஏமாற்றி என்னுடைய கணவர் எச்ஐவி தொற்று ஊசியை எனக்கு செலுத்தியுள்ளார் என மாதவி தாடே பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சரணை கைது செய்தனர்.
இதற்கு உடந்தையாக இருந்த டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.
- வீட்டில் இருந்து தப்பி செல்ல முடியாததால் அனைவரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், மஞ்சரியாலா மாவட்டம், வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவய்யா (வயது 50), அவரது மனைவி பத்மா (45), மகள் மோனிகா (23). மோனிகாவுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. வீடு முழுவதும் தீ பரவியது. வீட்டில் இருந்த அனைவரும் தப்பி செல்ல முயன்றனர்.
அவர்களால் தப்பிச் செல்ல முடியாததால் அனைவரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயில் கருகி இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விசாகப்பட்டினம் கடற்கரையில் நள்ளிரவில் பைக் மீது அமர்ந்தபடி இளம்பெண் ஒருவர் பீர் குடித்துக்கொண்டு இருந்தார்.
- ஆத்திரம் அடைந்த இளம்பெண் போலீசாரை ஆபாசமாக திட்டியதுடன் தான் குடித்துக்கொண்டு இருந்த பீர்பாட்டிலால் போலீசாரை பயங்கரமாக தாக்கினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரை சாலையில் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பைக் மீது அமர்ந்தபடி இளம்பெண் ஒருவர் பீர் குடித்துக்கொண்டு இருந்தார். போதை தலைக்கேறியதால் திடீரென அந்த பெண் அங்கு ரகளையில் ஈடுபட்டார். இதனைக் கண்ட போலீசார் இளம்பெண்ணிடம் சென்று நீங்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் போலீசாரை ஆபாசமாக திட்டியதுடன் தான் குடித்துக்கொண்டு இருந்த பீர்பாட்டிலால் போலீசாரை பயங்கரமாக தாக்கினார்.
அப்போது பீர்பாட்டில் உடைந்து அருகில் நின்று கொண்டிருந்த கோவிந்த் என்பவர் கண்ணில்பட்டு காயமடைந்தார். போலீசார் கோவிந்தை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் இளம்பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர் மீது பொது இடத்தில் தகராறு செய்தல், அரசு ஊழியரை வேலை செய்யாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆந்திராவில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- விக்கிரமசிங்கபுரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சிங்கை:
ஆந்திராவில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோட்டை விளைபட்டி விலக்கு பகுதியில் வந்த ஒரு மினி லாரியை சோதனை செய்தனர். அதில் மினிலாரியில் பின்புறம் பக்கவாட்டில் 4 இடங்களில் ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு அதில் 100 கிலோ கஞ்சா கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.
தொடர்ந்து டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ராமானுஜம்புதூரை சேர்ந்த தளவாய்மாடன் (வயது 24) என்பது தெரிய வந்தது.
இவர் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை விற்பனைக்காக மினி லாரியில் தூத்துக்குடிக்கு கடத்தி வந்துள்ளார். கஞ்சா கடத்தலை தடுப்பதற்கான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனையறிந்த அவர்கள் மாற்றுப்பாதை வழியாகவும், கிராமப்பகுதிகள் வழியாகவும் வர முடிவு செய்துள்ளனர்.
அதன்படி ஆந்திராவில் இருந்து வேலூர், கும்மிடிப்பூண்டி வழியாக மினி லாரியில் கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். போலீசாரின் சோதனையில் சிக்காமல் இருக்க பல்வேறு இடங்களில் கிராமப்பகுதிகள் வழியாக சுற்றி போலீசாரின் சோதனை நடைபெறாத இடங்களை தேர்வு செய்து அதன்வழியே வந்துள்ளனர்.
அவ்வாறு மதுரை வந்த அவர்கள் ராஜபாளையம், தென்காசி வழியாக அம்பாசமுத்திரம் வந்து அங்கிருந்து தூத்துக்குடி செல்ல திட்டமிட்டனர். இப்பகுதி வழியாக வந்தால் போலீசாரின் சோதனையில் இருந்து தப்பலாம் என கடத்தல் கும்பல் திட்டமிட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து போலீசார் முன்னெச்சரிக்கையாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா கடத்தி வந்த டிரைவர் போலீசாரிடம் சிக்கினார். இந்த கடத்தலில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? முக்கிய புள்ளிகள் யாருக்குதம் இதில் தொடர்பு உள்ளதா என கைது செய்யப்பட்ட டிரைவர் தளவாய் மாடனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






